காட்டுப்பன்றி வயிற்றுக்கறி – நியாண்டர் செல்வன்

சுமார் 2 கிலோ எடையுள்ள காட்டுப்பன்றி வயிற்று கறியை நாளை சமைக்க இன்று தயாரிப்பை துவக்கினேன்.

கறித்துண்டை நன்றாக கழுவி, துடைத்தேன். அதன்பின் ஃபோர்க்கால் நன்றாக கறி முழுக்க குத்தினேன். இதனால் மரிநேட் நன்றாக கறிக்குள் இறங்கும்.

அதன்பின் மிளகாய்ப்பொடி, மஞ்சள் பொடி, மல்லிபொடி, கரம் மசாலாவை கலக்கி காட்டுப்பன்றி வயிற்றின் இண்டு, இடுக்கு விடாமல் மஸாஜ் செய்தேன். உப்பு, லெமென் சேர்க்கவில்லை. ஓவர்நைட் மேரிநேடுக்கு இதை சேர்க்ககூடாது. சேர்த்தால் ஓவர்குக் ஆகிவிடும்.

அதன்பின்னர் தயிரை நன்றாக மேலே கொட்டி மஸாஜ் செய்தேன். இது இறைச்சியை மேலும் மிருதுவாக்கும்.

அதன்பின் கண்ணாடி பாத்திரத்தில் வைத்து அலுமினியம் ஃபாயிலை வைத்து மூடி பிரிட்ஜில் வைத்துவிட்டேன். நாளை காலை வரை மசாலாக்களும், தயிரும் தம் மேஜிக்கை இறைச்சியில் நிகழ்த்தும். அதன்பின் அக்னிபகவான் தன் மேஜிக்கை நிகழ்த்துவார்.

சமையல் குறிப்பு:

Follow us on Social Media