காலிபிளவர் தயிர் சாதம் – சரவணன் பெருமாள்

தேவையான பொருட்கள்;
காலிபிளவர் – சுடு தண்ணீரில் போடாமல் (வேக வைத்து அரைத்தால் கூழ் போலாகிவிடும்) மிக்ஸியில் தரு தருவென்று அரிசி பதத்திற்கு அரைத்து இட்லி சட்டியில் வேகவைத்து ஆரவைத்துக்கொள்ளவும். ( ஆடு, மாடு, பன்னியே சாப்பிட ஆரம்பிச்சாச்சு காலிபிளவரில் உள்ள தம்மாத்தூண்டு புழு நம்மை ஒன்றும் செய்யாதுன்னு நினைக்கிறேன் ? )
பேலியோ எண்ணை ( நெய்/வெண்ணை/தேங்காய் எண்ணை/நல்லெண்ணை) – உங்களுக்குத் தேவையான அளவு
சீரகம் – 1 டீஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – ¼ டீஸ்பூன்
பெரிய வெங்காயம் – 1 பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
பச்சை மிளகாய் – 1 நான்காக வருந்து கொள்ளவும்
இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – 1 கொத்து
உப்பு – தேவைக்கேற்ப
கொத்தமல்லி இலை – சிறிது
முந்திரி – சிறிது
பால் / மோர் – தயிர் சாதத்திற்கு எவ்வுளவு கொழ கொழப்பு வேண்டுமோ அவ்வுளவு
தயிர் – தேவைக்கேற்ப
அடுப்பில் வடச்சட்டியில் எண்ணை ஊற்றி சீரகம்,கடுகு தாளித்து, பெருங்காயத்தூள் சேர்த்து, பின்பு வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி அடுப்பை அனைத்தவுடன் கறிவேப்பிலை சேர்க்கவும் இந்தக் கலவை ஆறிய பிறகு இதில் வேகவைத்து ஆறிய காலிபிளவர்,பால் / மோர், தயிர், உப்பு சேர்த்து கலக்கி கடைசியாக கொத்தமல்லி முந்திரி தூவிவிட்டால் அருமையான சுவையான காலிபிளவர் தயிர் சாதம் தயார்.

சமையல் குறிப்பு:

https://www.facebook.com/100001213348037

Follow us on Social Media