காலிபிளவர் முருங்கைக்காய் கறி – தேன்மொழி அழகேசன்

தேவையான பொருட்கள்
காலிபிளவர்
முருங்கைக்காய்
பேலியோ மசாலா 1 மேக
கரம்மசாலா 1 தேக
தக்காளி 2
தேங்காய் துருவல் அல்லது தேங்காய் பால்
சின்ன வெங்காயம் 10 நீள வாக்கில் அரிந்தது
உப்பு தேவையான அளவு
தாளிக்க சோம்பு கடுகு கறிவேப்பிலை நெய்
செய் முறை#
பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் ஊற்றி வெங்காயம் தக்காளியை நன்றாக வதக்கியதும் காலிபிளவர் முருங்கைக்காய் தேவையான உப்பு சேர்த்து நன்றாக வதக்கியதும் தேவையான நீர் சேர்த்து மூடி போட்டு வேக வைக்கவும்.காய் நன்றாக வெந்ததும் மசாலா போட்டு கொதிக்க வைக்கவும்.இறக்கி வைக்கும் முன் அரைத்த தேங்காய் விழுது அல்லது தேங்காய் பால் சேர்க்கவும்.வடச்சட்டியில் நெய் ஊற்றி கடுகு சோம்பு வெடித்ததும் கறிவேப்பிலை பெருங்காயம் போட்டு தாளித்து ஊற்றவும்.
இதனை முட்டை தோசைக்கு தொட்டுக்கொள்ளலாம்.

சமையல் குறிப்பு :

Follow us on Social Media