காலிப்ளவர் ரைஸ் – செந்தழல் ரவி

அரிசி சாப்பிட்டு பழகியவர்கள் பேலியோவில் ஆரம்பத்தில் ரொம்ப கஷ்டப்படுவார்கள். ஆனால் பேலியோவில் மிக மிக எளிதான காலிப்ளவர் ரைஸ் செய்து கறிக்குழம்பு, மீன்குழம்பு, தயிர் சாதம் என உண்டு மகிழலாம். குறைந்த கிளைகோமின் இண்டெக்ஸ் கொண்ட காலிபிளவர் ரைஸ் நீரிழிவு சக்தி கொண்டவர்கள் கூட (சர்க்கரை அளவு அதிகரிக்கும் குறைபாட்டை இனி நீரிழிவு சக்தி என அழைக்கும்படி உன்னை வெல்வேன் நீரிழிவே புத்தகத்தை எழுதிய சிவராம் அண்ணா சொல்லி இருக்கிறார்) கூட தைரியமாக சாப்பிட்டு சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கலாம்.

இன்றைக்கு வெண்டைக்காய் பொரியல், புதினா – கொத்தமல்லி சட்னி. வீட்டில் இருப்பவர்கள் சாதாரண ரைஸும் நான் காளிப்ளவர் ரைஸும் செய்து உண்டு மகிழ்ந்தோம்.

தேவையான பொருட்கள்

காலிப்ளவர் ஒரு பூ
மைக்ரோவேவ் அவன்
புட் புராஸ்ஸர் / மிக்ஸி

செய்முறை

காளிப்ளவர் பூவை உதிர்த்து புட் புராசஸரில் உதிர்ந்தது போல அரைத்துக்கொள்ளவும். ரொம்ப கொழகொழவெனவும் இல்லாமல் ரொம்ப பெரிய பெரிய பீஸ் ஆகவும் இல்லாமல் டபுள் சைஸ் குண்டு உளுந்து சைஸில் இருக்க வேண்டும்.

இதனை ஒரு மைக்ரோவேவ் பாத்திரத்தில் இட்டு, தண்ணீர் எதுவும் ஊற்றாமல் அப்படியே மைக்ரோவேவில் 7 நிமிடம் வைக்கவேண்டும். மைக்ரோவேவ் மூடி ஒன்றையும் போட்டு மூடி வைக்கவேண்டும். சாதாரண ப்ளாஸ்டிக் பாத்திரத்தில் வைத்துவிடாதீர்கள். 7 நிமிடம் என்பதால் சரியான பாத்திரம் உபயோகிக்கவேண்டும்.

அவ்வளவு தான். வெளியே எடுத்து பாருங்கள் உங்கள் காளிப்ளவர் ரைஸ் ரெடி. குழம்பு, தயிர் என எதை ஊற்றியும் சாப்பிடலாம்.

சமையல் குறிப்பு:

https://www.facebook.com/835533157

Follow us on Social Media