காலிப்ளவ்ர் தேங்காய் சாதம் – ஜலீலாகமால்

காலிப்ளவ்ர் தேங்காய் சாதம்

பெயர் : ஜலீலாகமால்
உணவுவகை : சாதம் வகைகள்
உணவுமுறை :பேலியோ
உணவின் பெயர் : காலிப்ளவ்ர் தேங்காய் சாதம்

காலிப்ளவர் தேங்காய் சாதம்

தேவையான பொருட்கள்:

துருவிய காலிஃப்ளவர் – கால் கிலோ
துருவிய தேங்காய் – அரை கப் (100 கிராம்)

தாளிக்க:

நெய் – 1 மேசைகரண்டி
கடுகு – அரை தேக்கரண்டி
கருவேப்பிலை சிறிது
பூண்டு – இரண்டு பல்
பச்சமிளகாய் – ஒன்று
காஞ்சமிளகாய் – ஒன்று

அலங்கரிக்க

கொத்துமல்லி தழை – சிறிது
துருவிய தேங்காய் – சிறிது

செய்முறை:
காலிப்ளவரை துருவி வெண்ணீரில் உப்பு போட்டு இரண்டு கொதி கொதிக்க விட்டு தண்ணீரை வடிக்கவும்.
ஒரு வாயகன்ற வானலியில் தாளிக்க கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கி காலிஃப்ளவர் மற்றும் தேங்காய் சேர்த்து ஒரு கை தண்ணீ தெளித்து வதக்கி முடிபோட்டு 3 நிமிடம் வேகவிட்டு இரக்கவும்.
கடைசியாக சிறிது கொத்துமல்லி தழை மற்றும் ப்ரஷ் தேங்காய் துருவல் சேர்த்து சாப்பிடவும்.

கவனிக்க: இதே போல காலிப்ளவ்ரில் தயிர் சாதம், தக்காளி சாதம், புளிசாதம், தேங்காய் சாதம், ஃப்ரைட் ரைஸ் என விரும்பியதை செய்து சாப்பிடலாம்.

 

சமையல் குறிப்பு:

https://www.facebook.com/100001476193343

Follow us on Social Media