காளான் சுக்கா வறுவல் – தேன்மொழி அழகேசன்

தேவையான பொருட்கள்#
காளான் 1/2 கிலோ
சீரகம் 1 மே.க
மிளகு 1 மே.க.
காஷ்மீர் மிளகாய் தூள் 1 மே.க.
தனியா தூள் 1 மே.க.
மஞ்சள் தூள் 1/2 மே.க.
பூண்டு 25 (சிறியது)
உப்பு தேவையான அளவு
கறிவேப்பிலை,கொத்தமல்லி,புதினா ஒரு கைப்பிடி அளவு
தாளிக்க கடுகு சோம்பு தேங்காய் எண்ணெய்

15073380_914016325398735_2249168367476757087_n
செய் முறை#
1.காளானை நன்றாக கழுவிய பின் சிறியதாக அரிந்து கொள்ளவும்.
2 . பூண்டையும் மிக சிறியதாக அரிந்து கொள்ளவும் அல்லது தட்டி கொள்ளவும்.
3.வடச்சட்டியில் தேங்காய் எண்ணெய்ஊற்றி கடுகு வெடித்ததும் சோம்பு கறிவேப்பிலை போடவும்
4.அடுத்து சிறிதாக அரிந்த வெங்காயம் போட்டு வதக்கவும்.
5. காளானை போட்டு தேவையான அளவு உப்பு போடவும்
6 . பொடித்த சீரகம் மிளகு தூள்,மிளகாய் தூள் மஞ்சள் தூள் தனியா தூள்சேர்த்து நன்றாக வதக்கவும்.
தண்ணீர் விட வேண்டாங்க, காளானில் உள்ள நீரே போதும்.
7. மிதமான சூட்டில் மூடி போட்டு வேக விடவும்
8 கடைசியாக கொத்தமல்லி புதினா தூவி பரிமாரவும்
செய்ய தேவையான நேரம் 30 நிமிடம்
இரண்டு பேருக்கு பரிமாரலாம்

சமையல் குறிப்பு :

Follow us on Social Media