காளிஃப்ளவர் முட்டை குழி பணியாரம் – Rtn கண்ணன் அழகிரிசாமி

தேவையான பொருட்கள் :

முட்டை : 4
காளிஃளவர் : 100 கிராம்
வெங்காயம் : 2
தேங்காய் : 2 கீற்று
பச்சை மிளகாய் : 2
இஞ்சி : 1 இன்ச்
மஞ்சள் தூள் : சிறிதளவு
மிளகாய்த்தூள் : அரை தேக்கரண்டி
கரம் மசாலா தூள் : கால் தேக்கரண்டி
கடுகு : சிறிதளவு
உப்பு : தேவைக்கேற்ப
கொத்த மல்லி இலை : தேவைக்கேற்ப
நெய் : தேவைக்கேற்ப

செய்முறை :

காளிஃப்ளவரை மஞ்சள் தூள் & உப்பு கலந்த சுடுநீரில் 2 நிமிடம் போட்டு வைக்க வேண்டும். பிறகு தண்ணீரை வடிகட்டி காளிஃப்ளவரை நன்றாக அரைத்த்துக் கொள்ளவும்.

அரைத்த விழுதுடன் முட்டைகளை கலந்து , அத்துடன் மிளகாய்த்தூள் , மஞ்சள் தூள் , கரம் மசாலா தூள், சிறிய துண்டுகளாக நறுக்கிய தேங்காய் & உப்பு கலந்து கொள்ளவும்.

ஒரு கடாயில் நெய் ஊற்றி கடுகு தாளித்து , நறுக்கிய பச்சை மிளகாய் , இஞ்சி , வெங்காயம் போட்டு வதக்கி எடுத்துக் கொள்ளவும்.

இக்கலவையை முட்டை கலவையுடன் சேர்த்து கலந்து கொள்ளவும். உப்பு காரம் சரி பார்த்துக் கொள்ளவும்.

ஒரு பணியார குழி சட்டியில் நெய் ஊற்றி பணியாரமாக இட்டு எடுக்கவும்.

கொத்தமல்லி தூவி பரிமாற்றம் . தக்காளி சட்னியுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

சமையல் குறிப்பு :

Follow us on Social Media