காஷ்மீரி பூண்டு கோழி வருவல் – Rtn கண்ணன் அழகிரிசாமி

தேவையானவை :

கோழி கறி : அரை கிலோ
பூண்டு : 30 பல் ( உரித்தது)
காஷ்மீர் மிளகாய் வற்றல் : 10
வெங்காயம் : 1
கஸ்தூரி மேத்தி : 1 தேக்கரண்டி
புதினா இலை : சிறிதளவு
இந்துப்பு : தேவையான அளவு
நெய் : 4 தேக்கரண்டி

செய்முறை :

ஒரு மிக்ஸியில் பூண்டு & 8 காஷ்மீர் மிளகாய் வற்றல் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். அந்த விழுதுடன் சுத்தம் செய்த கோழி கறி & சிறிது இந்துப்பு சேர்த்து பிரட்டி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்

ஒரு கடாயில் நெய் ஊற்றி 2 காஷ்மீர் மிளகாய் வற்றல் கிள்ளி போட்டு தாளித்து அதனுடன் சுத்தம் செய்த கோழி கறி & அரைத்த விழுது சேர்த்து பிரட்டவும். மேலும் தேவை இருந்தால் இந்துப்பு சேர்த்து பிரட்டி, மூடி, 10 நிமிடம் மிதமான தீயில் வேக வைக்கவும். தண்ணீர் சேர்க்க வேண்டாம்.

பின் முடியை திறந்து நறுக்கிய வெங்காயம் & கஸ்தூரி மேத்தி சேர்த்து கிளறி மூடி மேலும் 5 நிமிடம் குறைந்த தீயில் வேக வைக்கவும்.

பின் மூடியை திறந்து புதினா இலை சேர்த்து பிரட்டி மூடாமல் குறைந்த தீயில் நன்றாக 3 நிமிடம் பிரட்டி இறக்கவும்.

சுவையான காஷ்மீரி பூண்டு கோழி வருவல் தயார் !

சமையல் குறிப்பு :

https://www.facebook.com/1305556053

Follow us on Social Media