கிரில் மீன் – ஜலீலாகமால்

கொடுவா மீன் கிரில் (sea bass)

தேவையான பொருட்கள்

பெப்பர் – ஒரு மேசைகரண்டி
காரிலிக் பவுடர் – ஒரு மேசைகரண்டி
சால்ட் – ஒரு தேக்கரண்டி

ஆலிவ் ஆயில் 50 மில்லி
ஒரிகானோ ஒரு மேசைகரண்டி
லெமன் – இரண்டு லெமன் ஜுஸ்

கார்லிக் முழு பூண்டு
கொத்துமல்லி கீரை
பிரிஞ்சி இலை
லெமன் ஸ்லைஸ்

செய்முறை

முழு மீனை சுத்தம் செய்து அங்காங்கே கீறிவிடவும்.
பாத்திரத்தின் அடியில் ஆலிவ் ஆயில் ஒரிகானோ லெமன் ஜூஸ் சேர்த்து பிறட்டி மீனை வைத்து மேலே மிளகு தூள் பூண்டு பொடி உப்பு சேர்த்து மீனில் முழுவதும் தடவவும்.
மேலே கீறிய இடைவெளியில் லெமன் ஸ்லைஸ் செய்து இடை இடையே சொருகவும்.( டயட் இல்ல்லாதவர்கள் இதில் மாங்காயை வைக்கலாம்)

மீனின் வயிற்றில் நல்ல ப்லேவருக்காக கொத்துமல்லி தழை, ஸ்லைஸாக அரிந்த எலுமிச்சை துண்டுகள், பிரிஞ்சி இலை , முழு பூண்டு வைக்கவும்.
இதை ஒரு மணி நேரம் ஊறவைத்து கிரில் செய்யவும்.

ட்ரேவில் விரும்பிய காய் களை வைத்து கொள்ளவும்.

ஓவனை 20 நிமிடம் முற்சூடு படுத்தி மேலும் கீழும் சூடு உள்ள கிரில் ஆப்ஷனை செலக்ட் செய்து 20 நிமிடம் கிரில் செய்யவும், மேலே லேசாக பட்டர் தேய்த்து
பிறகு திருப்பி விட்டு மேலும் 20 நிமிடம் கிரில் செய்யவும். கடைசியாக மேலே உள்ள கிரில் ஆப்ஷனை செலக்ட் செய்து 10 நிமிடம் வைத்து எடுக்கவும்.
பரிமாறும் அளவு : 4 நபருக்கு

சமையல் குறிப்பு:

https://www.facebook.com/100001476193343

Follow us on Social Media