கிரீன்ஸ் மூத்தி – திலகவதி மதனகோபால்

தேவையான பொருட்கள்:

பாலக்கீரை – 100 கிராம் (முருங்கை மற்றும் அகத்தி வேண்டாம்) ஏதேனும் ஒரு கீரை
நெல்லிக்காய் – 2 (60 கிராம்)
புதினா – 20 கிராம் (ஒரு கைப்பிடி)
கொத்தமல்லி – 20 கிராம் (ஒரு கைப்பிடி)
கருவேப்பிலை – சிறிது (20 கிராம்)
தக்காளி – 1 (90 கிராம் மத்திமம் அளவு)
வெள்ளரிக்காய் – 1/2 (150 கிராம்)
இஞ்சி – 1 இன்ச் (12 கிராம்)
பூண்டு – 3 பல் (9 கிராம்)
எலுமிச்சை சாறு – 1 மேஜைக்கரண்டி அல்லது 1/2 பழம் – 15 மில்லி
உப்பு – தேவையானால் (இல்லாமலும் நன்றாக இருக்கும்)

செய்முறை:

ஏதேனும் ஒரு கீரையை ஆய்ந்து சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவும். கீரையைப் பச்சையாகப் போட்டுத்தான் ஸ்மூத்தி செய்யச் சொல்கிறார்கள். ஆனால் உடல் நலத்தைக் கருத்தில் கொண்டு இதில் சிறிய மாற்றமாக கொதிக்கும் நீரில் 5 நிமிடங்கள் போட்டு எடுத்து ஒரு வடிகட்டியில் போட்டு அதை குளிர்ந்த நீரில் அலசிவிடுங்கள். இது பாதுகாப்பானது மற்றும் பச்சை வாடையைக் குறைக்கக் கூடியது.

இதை அனைத்தையும் ஒரு ப்ளென்டரில் / ஜூஸரில் போட்டு அரைக்க வேண்டும். திக்காக வரும் இந்த க்ரீன் ஸ்மூத்தியை அப்படியே குடிக்கவேண்டியதுதான்.

காலை வெறும் வயிற்றில் குடிக்கும்போது இதன் சத்துக்கள் முழுவதும் உடல் கிரகிக்கும்.

#குறிப்பு:
ஒரே கீரை வகையை உபயோகிக்காமல் தினம் ஒரு கீரை பயன்படுத்தவும். இது அல்கலாய்டுக்கு நம் உடம்பில் சேருவதை தவிர்க்கும்

#கிரீன் ஸ்மூத்தி நன்மைகள்:

* நுண்ணூட்டச்சத்துக்கள் நிறைந்தது
* அதிக நார்சத்து உட்கொள்ளுதல்
* மலச்சிக்கலை தடுத்தல்
* கீரை உட்கொள்ளும் அளவு அதிகரித்தல்
* இயற்கையான எடை இழப்பு
* எளிதான செரிமானம் மற்றும் ஊட்டச்சத்து ஜீரணித்தல்
* உடம்பில் நச்சு தன்மை நீக்குதல்
* செயல் திறன் மற்றும் ஆற்றலை அதிகரித்தல்
* மன தெளிவு மற்றும் கவனம்
* தெளிவான சருமம்
* ரத்தத்தை சுத்தப்படுத்துதல் , நோய் எதிர்ப்பு தன்மை பெருக்குதல், புத்துணர்ச்சி அளித்தல்.
* முடி உதிர்வதை தடுத்தல்
* உடலில் அல்கலைன் தாக்கம் ஏற்படுத்துதல். உடலின் அமிலகாரச் சமன்பாடு மீட்டுதல்.
* சப்ளிமென்ட் தேவையை குறைத்தல்.

சமையல் குறிப்பு:

https://www.facebook.com/100000094131255

Follow us on Social Media