கிரேவி டைப் மட்டன் சூப் – சுஜாதா வெங்கடேசன் சேலம்

தேவையான பொருட்கள்

மட்டன் – 250 கிராம்
தேங்காய் – 1 தே.க.
தனியா – 1 தே.க.
சீரகம் – 1/2 தே.க.
கசகசா – 1/2 தே.க.
பட்டை – 1
கிராம்பு – 2
மிளகு – 1 தே.க.
சின்ன வெங்காயம் – 5
பூண்டு – 6 பல்
வரமிளகாய் – 1
கறிவேப்பிலை – 5
எண்ணை – 1 தே.க.
நெய் – 2 தே.க.
உப்பு
மஞ்சள் தூள்

செய்முறை

1. தேங்காய் முதல் கறிவேப்பிலை வரை உள்ளவற்றை எண்ணையில்ல வறுத்து அரைக்கவும்.
2. குக்கரில் மட்டன், அரைத்த மசாலா, உப்பு, மஞ்சள் போட்டு, 4 கப் நீர் ஊற்றி 7 விசில் விடவும்.
3. குக்கரை திறந்து சூப் கப்பில் ஊற்றி, மேலே நெய் ஊற்றி பருகவும்.

 சமையல் குறிப்பு: 

https://www.facebook.com/100000501363762

 

Follow us on Social Media