கீரை முட்டை – ஹேமலதா கண்ணதாசன்

சமையல் குறிப்பு: ஹேமலதா கண்ணதாசன்
தேவையான பொருள்கள் :
முட்டை -3
தேங்காய் எண்ணெய் -2 tsps
சீரகம் -1tsps
வெங்காயம் -2 (சிறு துண்டுகளாக நறுக்கியது )
பச்சைமிளகாய் -3 (சிறு துண்டுகளாக நறுக்கியது)
மஞ்சள்தூள்- 1tsps
மிளகுத்தூள் -2 tsps
கீரை -500g (நறுக்கி வைத்து கொள்ளவும் )
உப்பு -(தேவைக்குஏற்ப )

செய்முறை :
வானொலியில் தேங்காய்யெண்ணையை ஊற்றி, காய்ந்ததும் சீரகம் நறுக்கிய வெங்காயம் பச்சைமிளகாய் போட்டு நன்றாக வதக்கவும் . பின்பு நறுக்கிய கீரையை சேர்த்து அதில் மஞ்சள்தூள் மிளகுத்தூள் உப்பு இவைகளை ஓன்றன்பினொன்றாக சேர்த்து மூடி வைக்கவும் அதன் பிறகு வதங்கிய கீரையின் ஒரு ஓரமாக ஒரு முட்டையை உடைத்து ஊற்றவும்.
இது போலவே மற்ற இரண்டு முட்டைகளை கீரையின் மற்ற ஓரங்களில் ஊற்றவும் . முட்டை வெந்ததும் முட்டை உடையாமல் பிரட்டி போடவும் , இரண்டு பக்கமும் வெந்ததும் கீரை உடன் கலந்து விடவும்.
இப்பொழுது சுவையான காலை உணவு ரெடி

Follow us on Social Media