குடமிளகாய் பஜ்ஜி – தேன்மொழி அழகேசன்

தேவையான பொருட்கள்
குடமிளகாய் 1
முட்டை 2
உப்பு தேவையான அளவு
மிளகாய்தூள் 1/2 டீக
வெண்ணெய் தேவையான அளவு
செய்முறை#
குடமிளகாயை சதுர வடிவில் அரிந்து கொள்ளவும்( அப்போ தான் பணியாரக்கல்லில் வேக வைக்க முடியும்).அரிந்த மிளகாயை தோசைக்கல்லில் வெண்ணெய் தடவி அதில் சிறிது நேரம் உப்பு போட்டு வதக்கவும்.பின் குடமிளகாயை உப்பு மிளகாய்தூள் கலந்த கலவையில் இடவும்.
ஸ்பூனால் ஒரு ஒரு மிளகாய எடுத்து வெண்ணெய் தடவிய பணியாரக்கல்லில் இடவும். ஸ்பூனால் இடும் போது மிளகாய் நடுவிலும் மேலே கீழே முட்டை கோட்டிங்கும் இருக்கும்.வெண்ணெய் உருகி இதனுடன் கலக்கும் போது மொறுமொறு பஜ்ஜி ரெடி.
தேங்காய் சட்னி அல்லது தாளித்த தயிர் சுவையாக இருக்கும்.
Maintenance diet இருப்பவர்கள் குடமிளகாய் பதில் உருளைக்கிழங்கு ஒன்று சிறியது சேர்த்து கொள்ளலாம்.
செய்ய தேவையான நேரம் 30 நிமிடம்
ஒருத்தர் இதனுடன் வேக வைத்த இரண்டு முட்டை சேர்த்து கொள்ளலாம்.
பி.கு.
பஜ்ஜி ய ஸ்பூன் வைத்து எடுக்கவும்.பனியார குச்சி வேண்டாங்க..

சமையல் குறிப்பு :

Follow us on Social Media