குடல்கறி வாழைப்பூ குழம்பு / சூப் – ராதிகா ஆனந்தன்

அளவு – 1 நபருக்கு

இதே முறையில் குடல்கறிக்கு பதிலாக நாட்டுக்கோழிக்கறியை வைத்து செய்யலாம்.

குக்கரில் சுத்தம் செய்த குடல்கறி 250 கி
, மஞ்சள் பொடி, இஞ்சி பூண்டு விழுது சிறிது சேர்த்து தண்ணீர் சிறிது ஊற்றி 7 – 8 விசில் வரை வேகவைத்துக் கொள்ளவும்..

ஒரு வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு, பட்டை, கிராம்பு 1,
கறிவேப்பிலை , போட்டு பொரிந்ததும் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், 2 பச்சை மிளகாய் நீளவாக்கில் கீறியது, இஞ்சி, பூண்டு ,சோம்பு சிறிது, சின்ன வெங்காயம் 3 – நான்கையும் சேர்த்து அரைத்த விழுது , சுத்தம் செய்து அரிந்த வாழைப்பூ 100 – 150 கி வரை
போட்டு வதக்கி மூடிப்போடவும்..

கறி வெந்து தண்ணீர் மீதமானால் அந்த தண்ணீரை ஊற்றி வாழைப்பூவை வேகவைக்கவும்..

பாதி வெந்ததும் மிளகாய்த்தூள் (காரத்திற்கேற்ப), மல்லிப்பொடி 1 ஸ்பூன் போட்டு பிரட்டிக்கொண்டு பொடியாக நறுக்குன தக்காளியை சேர்த்து வதக்கவும்.. வதக்கியதும் உப்பு போட்டு வெந்த கறி தண்ணீருடன் போட்டு மசாலா வாடை போய் நிறம் காரம் சுவை கறியுடன் ஒன்றாகும் வரை கொதிக்க வைத்து கடைசியில் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி போட்டு இரக்கவும்..

சூப்பிற்கு குழம்பில் நிறைய தண்ணீர் இருப்பதுப்போல் பார்த்துக்கொள்ளவும்.. கடைசியாக வேண்டுமென்றால் தேங்காய்ப்பால் அரை கப் சேர்த்து கொதி வருவதற்கு முன் மிளகுத்தூள் கொத்தமல்லி போட்டு இரக்கவும்

பின்குறிப்பு – வாழைப்பூவும் குடல்கறியும் வயிற்றுப்புண்ணை ஆற்றி உள்ளுருப்புகளுக்கு கூடுதல் பலத்தைக் கொடுப்பவை.. வயிற்றுப்புண் இருப்பவர்கள் காரத்தைக் குறைத்து, பச்சைமிளகாயை தவிர்த்து தேங்காய்பாலை அதிகப்படுத்திக் கொள்ளவும்..

சமையல் குறிப்பு:

Follow us on Social Media