குடல் குழம்பு – தேன்மொழி அழகேசன்

தேவையான பொருட்கள்#
குடல் 1/2 கிலோ
தக்காளி 1
சின்ன வெங்காயம் 5
பேலியோ மசாலா 2 டேக(நம் வீட்டுக்கு அரைக்கும் மசாலா வில் பருப்பு அரிசி இல்லாதது தான் பேலியோ மசாலா)
மஞ்சள் தூள் 1/2 டீக
இஞ்சி 1 இஞ்ச்
பூண்டு 6 பல்
தேங்காய் பால் 1 டம்ளர்
தாளிக்க சோம்பு கருவேப்பிலை கடுகு கருவேப்பிலை,வெண்ணெய்,பட்டை1,பிரியாணி இலை சின்னது,2 சின்ன வெங்காயம் நீள வாக்கில் அரிந்தது
செய் முறை#
குடலை நன்றாக பலமுறை கழுவ வேண்டும்.
நன்றாக கழுவிய குடலை தேவையான அளவு தண்ணீர் உப்பு மஞ்சள் தூள்சேர்த்து குக்கரில் 4 விசில் விடவும்.வடச்சட்டியில் வெங்காயம் தக்காளி இஞ்சி பூண்டு வெண்ணெய் ஊற்றி நன்றாக வதக்கவும்.வதக்கியவற்றை ஆற வைத்து மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும
ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் அல்லது சுத்து கொழுப்பு எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ளவற்றை ஒன்றன்பின் ஒன்றாக போட்டு தாளித்து அரைத்த கலவையை , வேக வைத்த குடலையும் ஊற்றவும்.மசாலா தேவையான உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.இறக்கும் போது தேங்காய் பால் ஊற்றவும்.சுவையான ஆட்டுக் குடல் குழம்பு ரெடி.
செய்ய தேவையான நேரம் 35 நிமிடம்
இரண்டு பேருக்கு பரிமாரலாம்.

சமையல் குறிப்பு :

Follow us on Social Media