குடல் ரத்த பொரியல் – தேன்மொழி அழகேசன்

தேவையான பொருட்கள்#
2 ஆடு ரத்தம்
குடல் கறி 1/2 கிலோ
சின்ன வெங்காயம் 15 நீள வாக்கில் அரிந்தது
மிளகாய் வத்தல் 5
பச்சமிளகாய் 2
கருவேப்பிலை சிறிதளவு
இஞ்சி பூண்டு விழுது 2 டேக
தேங்காய் துறுவல் 1 கப்
மஞ்சள் தூள் 1 டேக
உப்பு தேவையான அளவு
தாளிக்க சோம்பு கருவேப்பிலை கடுகு சுத்து கொழுப்பு எண்ணெய் அல்லது வெண்ணெய்
செய் முறை#
குடலை நன்றாக கழுவி விடவேண்டும்.கழுவி உப்பு மஞ்சள் தூள் போட்டு குக்கரில் 4 விசில் வைக்கவும்.வடச்சட்டையில் வெண்ணெய் அல்லது சுத்து கொழுப்பு எண்ணெய் ஊற்றி கடுகு சோம்பு வெடித்ததும் கருவேப்பிலை,வெங்காயம் போட்டு நன்றாக வதக்கியதும் மிளகாய் வத்தல்,பச்ச மிளகாய் ,ரத்தம் ( கடையிலேயே உப்பு போட்டு இருப்பார்கள் , உப்பு போட வேண்டாங்க..ரத்தத்தை நன்றாக பிசைந்து வைத்து கொள்ளவும்) நன்றாக வதக்கியதும் வேக வைத்த குடல்கறியை,இ இஞ்சி பூண்டு விழுது போடவும்.தண்ணீர்ஊற்ற வேண்டாங்க,குடல் வேக வைத்த நீரும் ரத்தத்தில் உள்ள நீரூமே போதும்.ரத்தம் சிறிது நேரம் வெந்து விடும்.
இறக்கும் போது தேங்காய் துறுவலை போடவும்.ஒரு மாற்றத்துக்காக இரண்டையும் கலந்து செய்தது.(குடல்,ரத்தம்)
செய்ய தேவையான நேரம் 30 நிமிடம்
4 பேருக்கு பரிமாரலாம்

 

சமையல் குறிப்பு :

Follow us on Social Media