கேபேஜ் வெஜ் ரோல் சூப் – தேன்மொழி அழகேசன்

முட்டைகோசு காய்கறி பன்னீர் சுருள் சூப்
1 ரோலுக்கு தேவையான பொருட்கள்#
காய்கறிகள் ( நமக்கு பிடித்தமானது)
நான் இங்கு புடலை,பன்னீர்,முட்டைக்கோஸ்,காலிபிளவர்,பீர்க்கை சேர்த்துள்ளேன்.
கரம்மசாலா 1/2 தேக
கறிமசாலா 1/2 தேக
இஞ்சி பூண்டு விழுது 1 மேக
மஞ்சள் தூள் 1 தேக
சின்ன வெங்காயம் 5
உப்பு தேவையான அளவு
தக்காளி 1
தாளிக்க கடுகு சோம்பு தேங்காய் எண்ணெய் கறிவேப்பிலை
செய்முறை#
வடச்சட்டியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகு சோம்பு வெடித்ததும் கறிவேப்பிலை அரிந்த வெங்காயம் தக்காளி இஞ்சி பூண்டு விழுது அனைத்தையும் ஒன்றாக போட்டு நன்றாக வதக்கியதும் உப்பு மசாலா பொருட்கள் சேர்த்து சிறிது நீர் சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.மசாலா கெட்டியா இருக்கட்டும்.
2 . முட்டைகோசை முழுசாக கொதிக்கும் தண்ணீரீல் போடவும்.அப்போதான் தனித்தனியா பிரியும்.இதை மடக்கும் போது கிழியாது . இந்த ரோலை பிரிந்து விடாமல் முடிய வாழை இலை ரிப்பன் போல பிரித்து கொதி தண்ணீரீல் போடவும்.வெங்காய தாள் கிடைத்தால் நல்லது (எனக்கு கிடைக்கவில்லை.) மசாலா கலவையை முட்டைகோசு இலையில் நடுவில் வைத்து மூடி வாழை இலையை ரிப்பன் போல கட்டவும்.
சூப்#
தக்காளி 1
சிறிதளவு வெட்டிய முட்டைகோசு
இஞ்சி பூண்டு விழுது 1 மேக
மஞ்சள் தூள் 1 தேக
கரம்மசாலா 1/2 தேக
உப்பு தேவையான அளவு
மேலே கொடுத்துள்ள வற்றை ஒன்றாக கலந்து நன்றாக கொதிக்க வைக்கவும்.நன்றாக கொதிக்கும் போது ரோலை (சுருள்) மெதுவாக சூப்பில் இடவும்.
பிரிந்து விடாமல் இருக்க சின்ன தட்டு ஒன்றை மேலே வைக்கவும்(படத்திலுள்ளபடி)
10 நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும்.
தட்டை எடுக்கவும்.ஒரு பாத்திரத்தில் ஊற்றி நெய் ஊற்றி பரிமாரவும்.கொத்தமல்லி தூவி அலங்கரிக்கவும்.
பிகு#
YouTubeல சைனீஸ் ரெசிபி பல மாற்றங்களுடன். நன்றி.
செய்து முடுத்த உடனே காலி.
காய்கறிகள் பதிலாக அசைவத்தையுலையும் செய்யலாங்க.
மட்டன் வேக வைத்த சூப்பும் சூப்பராக இருக்கும்

சமையல் குறிப்பு :

Follow us on Social Media