கேப்சிகம் சீஸ் பேலியோ ஆம்லேட் – வசந்த குமார்

CAPSICUM CHEESE PALEO OMLETTE:
கேப்சிகம் சீஸ் பேலியோ ஆம்லேட் :
.
முட்டை: 4
கேப்சிகம் பெரியது : 1 (மூன்று வண்ண கேப்சிகமும் கலந்து உபயோகிக்கலாம்.)
சீஸ்: தேவையான அளவு
பெரிய வெங்காயம்: 4 (சன்னமாக நறுக்கவும்)
தக்காளி: 2 (சன்னமாக நறுக்கவும்)
மிளகுதூள்: டீஸ்பூன்
பச்சை மிளகாய்: 2 (சன்னமாக நறுக்கவும்)
கொத்துமல்லி தழை: அலங்கரிக்க தேவையான அளவு
உப்பு: தேவையான அளவு
தேங்காய் எண்ணெய்: தேவையான அளவு
.
செய்முறை:
மூன்று டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் விட்டு நறுக்கி வைத்த வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும், கேப்சிகம் போட்டு இரண்டு நிமிடம் வதக்கிய பின்னர் கடாயை இறக்கிவிட்டு ஒரு தனி பாத்திரத்தில் போடவும், பின்னர் அதன் மேல் முட்டைகளை உடைத்து ஊற்றவும், ஒரு ஸ்பூன் மிளகுதூள் தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக கலக்கி வைக்கவும். பின்னர் தோசை கல்லை அடுப்பில் வைத்து வழக்கமான ஆம்லேட் போல ஊற்றி வேக வைக்கவும்அடுப்பை மிதமாக வைத்தால் அடிப்பிடிக்காமல் இருக்கும் பின்னர் கரண்டியால் ஆம்லெட்டை திருப்பி போட்டு வேக வைக்கவும் முக்கால் பாகம் வெந்த நிலையில் தேவையான அளவு சீஸ் போட்டு கொத்துமல்லி தழை தூவி விட்டு ஒரு நிமிடத்தில் ஆம்லெட்டை எடுக்கவும். மிகவும் சுவையான கேப்சிகம் சீஸ் ஆம்லேட் தயார்.

 

சமையல் குறிப்பு :

Follow us on Social Media