கேப்ஸிகம் ஸ்டப்டு வித் வெஜ் பன்னீர் – பிருந்தா ஆனந்த்

#தேவையான பொருட்கள்::

கேப்ஸிகம் – 4
கேரட் -2
பன்னீர் -100 கி
முட்டை கோஸ் – 150கி
காலிபிளவர் – 100கி
வெங்காயம் -1
பரங்கிக்காய் -100கி
மிளகாய் தூள் -1 ஸ்பூன்
மல்லி தூள் -1 ஸ்பூன்
கரம் மசாலா -1ஸ்பூன்
வெண்ணெய் – தே. அளவு
தக்காளி -1
பச்சை மிளகாய் -1
சீரகம் -1 ஸ்பூன்
உப்பு – தே. அளவு
சீஸ் – தே. அளவு

செய்முறை ::

*வெண்ணெயில் சீரகம் தாளித்து வெங்காயத்தை வதக்கி ,துறுவிய அனைத்து காய்களையும் உப்பு சேர்த்து வேகும்வரை வதக்கவும்,பன்னீரை துருவி கலவையில் சேர்த்து வதக்கவும்.
*தக்காளி ,பச்சை மிளகாய் அரைத்து காயில் சேர்த்து வதக்கவும்.
*பிறகு மிளகாய் தூள், மல்லி தூள்,கரம் மசாலா சேர்த்து வதக்கவும்.
*குடைமிளகாயில் உள்ள விதைகளை வெளியே எடுத்துவிட்டு,காய்களை உள்ளே
ஸ்டஃப் செய்யவும்.
*ஓவனில் 10 நிமிடம் வைத்து எடுத்து சீஸ்ஸை துறுவி ஸ்டப்டு குடைமிளகாயின் மேல் தூவினால்,
*சுவையான கேப்சிகம் ஸ்டப்டு வித் பன்னீர் தயார்.

{குறிப்பு: ஓவன் இல்லாதவர்கள் குக்கரிர் 1 டம்ளர் நீர் மற்றும் 1/2 ஸ்பூன் உப்பு சேர்த்து ஸ்டப்டு குடைமிளகாயை வைத்து 8 நிமிடம் மூடி வைக்க வேண்டும் .விசில் போடக்கூடாது}

#பரங்கிக்காய் தயிர் பச்சடி ::

#தேவையான பொருட்கள் ::

பரங்கிக்காய் – 50கி
தயிர் -100 மிலி
பச்சை மிளகாய் -1
வெண்ணெய் – தே. அளவு
இஞ்சி – சிறிதளவு
பரங்கிவிதை – 10 கி
உப்பு – தே. அளவு

*வெண்ணையில் துறுவிய பரங்கிக்காய்,பரங்கிவிதை நறுக்கிய பச்சைமிளகாய் ,உப்பு சேர்த்து 5 நிமிடம் வதக்கி இறக்கவும்.

*கெட்டித் தயிரில் ஆறிய கலவையுடன் மிகச் சிறிதளவு துறுவிய இஞ்சி மற்றும் உப்பு சேர்த்தால் ,
*சுவையான பரங்கிக்காய் தயிர் பச்சடி தயார்.
{கேப்சிகம் ஸ்டப்டு வித் வெஜ் பன்னீரை பரங்கிக்காய் தயிர் பச்சடியுடன் சைடு டிஷ்சாக சாபிட்டால் சுவை அருமை }

சமையல் குறிப்பு :

Follow us on Social Media