கேரட் ஜூஸ் & பசுமஞ்சள் முட்டை ப்ரை – தேன்மொழி அழகேசன்

1 .கேரட் ஜூஸ்#
துருவிய கேரட்2+ தக்காளி 2+ எலுமிச்சை பழம் 1/2 மூடி+ உப்பு+ இஞ்சி மிக்சியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.தேவையான தண்ணீர் சேர்த்து நன்றாக மைய அரைத்துக் கொள்ளவும்.தேவையென்றால் வடுகட்டி கொள்ளலாம்(நான் அப்படியே குடித்து விட்டேன் ?)..புள்ளைகளுக்கு வடிகட்டி சிறிது தேன் கலந்து கொடுக்கலாங்க..(non Paleo) சர்க்கரை நோயாளிகள்,எடை இழப்பில் உள்ளவங்க கேரட்டை தவிர்க்கவும்.

2. பசுமஞ்சள் முட்டை ப்ரை#
வேக வைத்த முட்டையை இரண்டாக அரிந்து கொள்ளவும்.தோசைக்கல்லை நன்றாக சூடாக்கி அணைத்து விடவும்.பின் நெய் ஊற்றி மஞ்சள் தூள் உப்பு போட்டு முட்டையை அதில் வைக்கவும் .. திருப்பி விடவும்.மிதமான வெப்பத்தில் வைத்தும் செய்யலாங்க..அதிக வெப்பம் மஞ்சள் கலரை மாற்றி விடும் . பசுமஞ்சள் அல்லது மஞ்சள் தூள்

சமையல் குறிப்பு :

Follow us on Social Media