கேரட் பனீர் புலாவ் – ராணி விஜயன்

நேரம் : முப்பது நிமிடங்கள் (சுமாராக)

வ.எண் பொருள் அளவு புரதம் கார்ப் கொழுப்பு நார் கலோரி
1 கேரட் 2 0 0 கிராம்

2 GM

22 GM 0 GM 8 GM

96

2 பனீர் 2 0 0 கிராம்

37 GM

2 GM 42 GM 0 GM

530

3 பெரிய  வெங்காயம் 1 (பொடியாக  நறுக்கியது)

1 GM

11 GM 0 GM 3 GM

53

4 தக்காளி 1 (பொடியாக  நறுக்கியது)

0 GM

1 GM 0 GM 0 GM

9

5 முட்டை 2

13 GM

2 GM 13 GM 0 GM

167

  இரண்டு பேருக்கு மொத்தம்

53 GM

38 GM 55 GM 11 GM 855
  ஒருவருக்கு மொத்தம் 26.5 GM 19GM 27.5 GM 5.5 GM

477.8

 

மேல் குறிப்பிட்டுள்ள அவவுகள் இரண்டு  பேருக்கு . மொத்த  அளவுகளை இரண்டால் வகுத்து ஒருவருக்கு அளவு பார்த்துக்கொள்ளவும்.

தேவையான பொருள்கள் :

 1. கேரட் – 2 0 0 கிராம்
 2. பனீர் – 2 0 0 கிராம்
 3. பெரிய வெங்காயம் – 1 (பொடியாக  நறுக்கியது)
 4. தக்காளி – 1 (பொடியாக  நறுக்கியது)
 5. முட்டை – 2 (தாவர  உணவியலாளர்கள் தவிர்த்துவிடலாம்)

 

தாளிப்புக்கு :

 1. கடுகு – 1 சிட்டிகை
 2. சோம்பு – ¼ ஸ்பூன்
 3. காய்ந்த வெந்தய கீரை – கொஞ்சம்
 4. பெருங்காயம் – 1 சிட்டிகை
 5. மஞ்சள் தூள் – 1 / 4 ஸ்பூன்
 6. சீரகத் தூள் – ½ ஸ்பூன்
 7. உப்பு – தேவையான  அளவு
 8. மிளகாய் தூள் – ½ ஸ்பூன்
 9. மல்லி தூள் – ½ ஸ்பூன்
 10. கரம்மசாலா – ½ ஸ்பூன்
 11. இஞ்சி பூண்டு – 1 ஸ்பூன் (விழுதாக)
 12. கறிவேப்பிலை – கொஞ்சம்
 13. புதினா – கொஞ்சம்
 14. கொத்துமல்லி – கொஞ்சம்
 15. பச்சை மிளகாய் – 1 (இரண்டாக உடைத்துக் கொள்ளவும)

செய்முறை:

 1. அடுப்பில் மண் / இரும்பு பாத்திரம் வைத்து தேங்காய் எண்ணெய் விடவும். (வசதிக்கேற்ப நெய் அல்லது நல்லெண்ணெய் விடலாம்)
 2. கடுகு, சோம்பு, காய்ந்த வெந்தய கீரை போடவும்.
 3. பொரிந்தவுடன் வெங்காயம் சேர்க்கவும். நன்றாக  வதக்கவும்.
 4. இஞ்சி பூண்டு சேர்த்து நன்றாக  வதக்கவும்.
 5. வெட்டி வைத்த பச்சை மிளகாய் சேர்க்கவும்.
 6. புதினா, கறிவேப்பிலை தழைகளை  சேர்க்கவும்.
 7. வதங்கியவுடன் தக்காளி  சேர்த்து  வதக்கவும.
 8. சிறிது, உப்பு சேர்க்கவும்.
 9. தக்காளி கூழ் போல்  நன்றாக  வதங்கியவுடன் கொடுக்கப்பட்ட பொடி வகைகளை சேர்த்து நன்றாக கிளறவும்.
 10. இரண்டு நிமிடங்கள்  கழித்து துருவி வைத்த  கேரட் சேர்க்கவும்.நன்கு கலக்கவும்.
 11. துருவி வைத்த பனீர் சேர்க்கவும். அடுப்பை குறைத்து வைத்துக்கொள்ளவும்.
 12. நன்றாக கலக்கவும்.
 13. இன்னொரு அடுப்பில் ஒரு கடாய் வைத்து தேங்காய் எண்ணெய் விடவும்.
 14. ஒரு கிண்ணத்தில் இரண்டு முட்டைகளையும் உடைத்து சிறிது உப்பு, மிளகு சேர்த்து அடித்துக்கொள்ளவும்.
 15. அதை கடாயில் போட்டு பொரித்துக்கொள்ளவும்.
 16. பொரித்த முட்டையை பனீர் கேரட் கலவையில் சேர்க்கவும். நன்றாக கலந்து விடவும்.
 17. கொத்துமல்லி தழை சேர்த்து இறக்கி விடவும்.
 18. சூடாக பரிமாறவும்.

இணைப்புக்கு : https://www.youtube.com/watch?v=IfjzIE0YZ1k

கேரட் பனீர் புலாவ் தயார்.

 

(குறிப்பு :  முட்டை தவிர்க்க விரும்புவோர் அதை விட்டுவிடலாம்.)

சமையல் குறிப்பு:

https://www.facebook.com/100000349157027

Follow us on Social Media