கேரளத்து இறால் கூட்டு – Rtn கண்ணன் அழகிரிசாமி

தேவையான பொருட்கள் :

இறால் : 250 கிராம்
வெங்காயம் : 2
தக்காளி : 2
தேங்காய் பால் : 1 கப்
இஞ்சி,பூண்டு விழுது : 2 தேக்கரண்டி
எலுமிச்சம் பழம் : 2
பச்சைமிளகாய் : 5
தேங்காய் எண்ணெய் : 3 தேக்கரண்டி
உப்பு : தேவைக்கு
கொத்தமல்லி : சிறிதளவு

செய்முறை :

நன்கு கழுவிய இறாலை எலுமிச்சம் பழச்சாற்றில் ஊற வைக்கவும்.

தக்காளியை கொதிக்கும் நீரில் போட்டு வைத்து,சிறிது நேரம் கழித்து தோல் உரித்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.

பின்பு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், பச்சைமிளகாய் வதக்கவும்.அத்துடன் இஞ்சி பூண்டு விழுதைப் போட்டு பச்சைவாசனை போகும் வரை நன்கு வதக்கவும்.

பின்பு இறாலையும் சேர்த்து வதக்கிய பின்பு அதில் அரைத்து வைத்திருக்கும் தக்காளியை சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.

அத்துடன் தேங்காய்ப் பால் ஊற்றி தேவையான உப்பையும் அதில் சேர்த்து இறால் வேகும் வரை வைக்கவும்.

பின்பு கொத்தமல்லி தழையை தூவி இறக்கவும்.

சுவையான கேரளத்து இறால் கூட்டு தயார்.

சமையல் குறிப்பு :

Follow us on Social Media