கேரளத்து சமையல் : ஓலன் – Rtn கண்ணன் அழகிரிசாமி

தேவையான பொருட்கள் :

பூசணிக்காய் : கால் கிலோ
காராமணிக்காய் : 100 கிராம்
பெரிய வெங்காயம் : 2
சின்ன வெங்காயம் : 10
பச்சைமிளகாய் : 4
இஞ்சி : சிறிய துண்டு
உப்பு : தேவையான அளவு
தேங்காய் பால் : ஒன்றரை கப்
தேங்காய் எண்ணெய் : 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை : சிறிதளவு

செய்முறை :

வெங்காயங்களை சிறிதாக நறுக்கி கொள்ளவும். மிளகாயை கீறிக்கொள்ளவும். பூசணிக்காயை விதைகள்,தோல் நீக்கி நீளவாட்டில் துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும்.

காராமணியையும் சற்று நீண்ட துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சியை நசுக்கிக் கொள்ளவும்.

சிறிது தண்ணீரும், அரை கப் தேங்காய்ப்பாலும் சேர்த்து நறுக்கிய காய்கள்,வெங்காயம்,மிளகாய் முதலானவைகளைச் சேர்த்து வேக வைக்கவும்.

கிளறிவிட்டு நன்றாக வேகவிடவும். இஞ்சி, உப்பு சேர்க்கவும். வெந்தக் காய்க் கலவையில் மீதமுள்ள ஒரு கப் தேங்காய்ப் பாலைச் சேர்த்துக் கிளறவும். ஒரு கொதி விட்டு இறக்கவும்.

ஒரு கடாயில் என்னை விட்டு கறிவேப்பிலை தாளித்து இறக்கி பரிமாறவும் .

கேரளத்து ஓலன் தயார் …

சமையல் குறிப்பு :

Follow us on Social Media