கொங்குநாடு கொத்துக்கறி தொக்கு – திருப்பூர் கணேஷ்

பேலியோ – அசைவம்

தேவையான பொருட்கள்:

1. மட்டன் கொத்துக்கறி கொழுப்புடன் – 1 கிலோ
2. நெய் – 4 தேக்கரண்டி
3. சின்ன வெங்காயம் – 5 (சிறிதாக வெட்டிவைக்கவும்)

(அரைக்க-
4 .சின்ன வெங்காயம் – 10
5. மிளகு – 1/2 ஸ்பூன்
6. சீரகம் – 1 ஸ்பூன்
7. சோம்பு – 1 ஸ்பூன்
8. பட்டை – 3
9. கிராம்பு – 3
10. பூண்டு – 8 பல்
11. இஞ்சி – 2 இன்ச்
12. பச்சைமிளகாய் – 5
13. தக்காளி – 2
14. மல்லித்தூள் – 1-1/2 மேசைக்கரண்டி
15. மிளகாய்த்தூள் – 3 மேசைக்கரண்டி
16. கறிவேப்பிலை – 2 கொத்து
17. மல்லித்தழை – 5 தண்டு )

18. இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 ஸ்பூன் (இஞ்சி பூண்டு பேஸ்ட் செய்வது எப்படி)
19. மஞ்சள்தூள் – 1 ஸ்பூன்
20. கறிவேப்பிலை – 2 கொத்து
21. மல்லித்தழை – 6 தண்டு
22. உப்பு – தேவையான அளவு

4 முதல் 17 வரை உள்ள பெருட்கள் அனைத்தையும் பச்சையாக மிக்சி ஜாரில் போட்டு கொஞ்சம் தண்ணீர் விட்டு நைசாக அரைத்துக்கொள்ளவும்.

செய்முறை:

முதலில் குக்கரில் கொத்துக்கறியை போட்டு உப்பு, மஞ்சள்தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட், கறிவேப்பிலை 1 கொத்து, மல்லித்தழை 3 தண்டு கிள்ளி போட்டு, தண்ணி 1-1/2 டம்ளர் ஊற்றி கலக்கிவிட்டு 6 to 7 விசில் விட்டு இறக்கிவைக்கவும்.

ஒரு வாணலியில் நெய் விட்டு காய்ந்ததும் வெட்டி வைத்த வெங்காயத்தை போட்டு வதக்கி விட்டு அரைத்துவைத்த மசாலாவை கொட்டி பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கிவிடவும் (தேவைபட்டால் தண்ணீர் கொஞ்சம் சேர்த்தலாம்). பின் குக்கரில் உள்ள கறி மற்றும் தண்ணீரை கொட்டி கலக்கி விட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து 15 நிமிடம் மூடி போட்டு கொதிக்கவிடவும். அதன் பின் நீர் சுண்டும் வரை ஓட்டிவிட்டு தொக்கு பதம் வந்ததும் கறிவேப்பிலை 1கொத்தையும் மல்லித்தழை 3தண்டையும் சிறிதாக கிள்ளி போட்டு இறக்கிவைக்கவும்.

இப்போது அருமையான கொங்குநாடு மட்டன் கொத்துக்கறி தொக்கு ரெடி…
பச்சையா அரைச்சு வதக்கிய மசாலால வெந்த மட்டன் டேஸ்ட் அப்படியே அல்லும்…

சமையல் குறிப்பு :

Follow us on Social Media