கொத்துகறி வறுவல் – தேன்மொழி அழகேசன்

தேவையான பொருட்கள்#
கொத்துகறி (மட்டன்)1/2 கிலோ
வெங்காயம் 1
சீரகம் மிளகு 1 டீக
மஞ்சள் தூள் 1 டீக
மிளகாய்தூள் 1 டீக
மிளகாய் வத்தல் 3
கருவேப்பிலை சிறிதளவு
உப்பு தேவையான அளவு
இஞ்சி 2 இஞ்ச்
பூண்டு 10 பல்( இஞ்சி பூண்டை மிளகு சீரகம் மிக்சியில் போட்டு அரைத்துக வைத்து கொள்ளவும்)
தாளிக்க சோம்பு கருவேப்பிலை கடுகு சுத்து கொழுப்பு எண்ணெய்,பட்டை கிராம்பு

14980823_910000225800345_5301404268536653479_n
செய் முறை#
கொத்துகறி மட்டனை குக்கரில்1/2 டம்ளர் தண்ணீர் , உப்பு , மஞ்சள் தூள்சேர்த்து ஒரு விசில் விட்டு வேக விடவும்.
வடச்சட்டியில் சுத்து கொழுப்பு எண்ணெய் ஊற்றி கடுகு சோம்பு பட்டை கிராம்பு கருவேப்பிலை வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது,சீரகம் மிளகு தூள் வரிசையாக வதக்கவும்,பின் வேக வைத்த கொத்துகறி மட்டனை போடவும் ,நீர் வற்றும் வரை சுருள வதக்கினால் சுவையான கொத்துகறி வறுவல் ரெடி.
செய்ய தேவையான நேரம் 30 நிமிடம்

சமையல் குறிப்பு :

Follow us on Social Media