கோழிக்கறி முட்டை தொக்கு – Rtn கண்ணன் அழகிரிசாமி

தேவையான பொருட்கள் :

கோழிக்கறி (எலும்பு நீக்கி கைமாவாக கொத்தியது) : 250 கிராம்
முட்டை : 2
வெங்காயம் (பொடியாக நறுக்கியது) : 1
தக்காளி : 1
இஞ்சி பூண்டு விழுது : 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் : 1
புதினா : சிறிதளவு
மஞ்சள் தூள் : கால் தேக்கரண்டி
மிளகாய் தூள் : அரை தேக்கரண்டி
மிளகு சீரக தூள் : அரை தேக்கரண்டி
கரம் மசாலா தூள் : கால் தேக்கரண்டி
உப்பு : தேவையாள அளவு
கொத்தமல்லி இலை சிறிதளவு
நெய் : 2 தேக்கரண்டி

செய்முறை :

ஒரு இரும்பு கடாயில் நெப் ஊற்றி, பச்சை மிளகாய் , புதினா , வெங்காயம் , இஞ்சி பூண்டு விழுது , தக்காளி ஆகியவற்றை வரிசைப்படி ஒன்றன் பின் ஒன்றாக வதக்கவும்.

அத்துடன் கோழிக்கறியை சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு மஞ்சள் தூள், மிளகாய் தூள் , மிளகு சீரக தூள் சேர்த்து வதக்கி , உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக வேக வைக்கவும்.

தொக்கு பதத்திற்கு வந்தவுடன் முட்டை சேர்த்து வதக்கவும். முட்டையும் வெந்து தொக்கு பதம் ஆனவுடன் , கரம் மசாலா & கொத்தமல்லி இலை தூவி இறக்கவும் .

கோழிக்கறி முட்டை தொக்கு தயார்

(இவ்வகையில் கோழிக்கறிக்கு பதிலாக மாட்டுக்கறி அல்லது ஆட்டுக்கறியும் உபயோகிக்கலாம் )

சமையல் குறிப்பு :

https://www.facebook.com/1305556053

Follow us on Social Media