கோழி உப்பு கறி – பிருந்தா ஆனந்த்

தேவையான பொருட்கள் :

கோழி (தோலுடன் ) – 1/2 கி
சீரகம் – 5 தே. க
காய்ந்த மிளகாய் – 15
(காரத்திற்கு ஏற்றவாறு)

உப்பு தே. அ – தே. அளவு
தேங்காய் எண்ணெய்
அல்லது
நல்லெண்ணெய் – தே. அளவு

#செய்முறை :

* கடாயில் எண்ணெய் ஊற்றி (அனல் குறைவாக வைத்து) சீரகம் போட்டு தாளிக்கவும். பிறகு காய்ந்த மிளகாயை
கில்லிப் போட்டு பின்பு கோழியை சேர்க்கவும், தண்ணீர் தேவையில்லை,
கோழியில் இருக்கும் நீர் போதுமானது பிறகு உப்பு சேர்க்க வேண்டும். அனல் குறைவாக வைத்து அடிக்கடி கிளறி விடவும்.
(தேவையானவர்கள் மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ளலாம்)
*குறைவான நேரத்தில் சமைக்கும் சுவையான கோழி உப்பு கறி.
{குறிப்பு :நாட்டுக்கோழியில் செய்பவர்கள் குக்கரில் தண்ணீர் சேர்த்து வேகவைத்து சமைக்கவும்}.

சமையல் குறிப்பு :

Follow us on Social Media