கோழி + கீரை பொடிமாஸ் – Rtn கண்ணன் அழகிரிசாமி

தேவையான பொருட்கள்:

கோழிக் கறி (எலும்பில்லாமல் கொத்தியது) : அரை கிலோ
அரைக்கீரை : 1 கட்டு (பொடியாக நறுக்கி வைக்கவும்)
வெங்காயம் : 4 (பொடியாக நறுக்கி வைக்கவும்)
தக்காளி : 3 (பொடியாக நறுக்கி வைக்கவும்)
பச்சை மிளகாய் : 2
மஞ்சள் தூள் : கால் தேக்கரண்டி
மிளகாய்த் தூள் : 2 தேக்கரண்டி
தனியாத் தூள் : 3 தேக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது : 2 தேக்கரண்டி
சோம்புத்தூள் : 1 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் : ௧ தேக்கரண்டி
இந்துப்பு – தேவைக்கேற்ப
தேங்காய் எண்ணெய் : 3
நெய் : 1 தேக்கரண்டி
கொத்தமல்லி இலை : சிறிது

செய்முறை:

கொத்துக்கறியை சுத்தம் செய்து, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், தனியாத் தூள், சிறிது உப்பு சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி, குக்கரில் இரண்டு விசில் மட்டும் வைத்திருந்து இறக்கி ஆற வைக்கவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு விழுது, பச்சை மிள்காய் ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக வதக்கவும்.

நறுக்கிய கீரையை சேர்த்து வதக்கி, அதில் வேகவைத்த கொத்துக்கறியையும் சேர்த்து வதக்கவும். கீரையும், கறியும் மசாலாவுடன் சேர்த்து வெந்து நன்கு கெட்டியாகி, பொடிமாஸ் பதம் வந்தவுடன், கரம் மசாலாத்தூள் & நெய் சேர்த்து, கொத்தமல்லி இலை தூவி இறக்கி விடவும்.

சுவையான கோழி கீரை பொடிமாஸ் தயார் !

சமையல் குறிப்பு :

Follow us on Social Media