கோவை குருதிப் பொரியல் – திருப்பூர் கணேஷ்

பேலியோ – அசைவம்

தேவையான பொருட்கள்:

1. ஆட்டு இரத்தம்- 1 கப் (400 கிராம்)
2. தேங்காய் எண்ணெய்- 3 ஸ்பூன்
3. சீரகம்- 1/2 ஸ்பூன்
4. பச்சைமிளகாய்- 4 (சிறிதாக வெட்டி வைக்கவும்)
5. பெரிய வெங்காயம்- 2 (சிறிதாக வெட்டி வைக்கவும்)
6. பூண்டு- 2 பெரிய பல் (சிறிதாக வெட்டி வைக்கவும்)
7. இஞ்சி- 1 துண்டு (சிறிதாக வெட்டி வைக்கவும்)
8. கறிவேப்பிலை- 1கொத்து (சிறிதாக வெட்டி வைக்கவும்)
9. மல்லித்தழை – 4 தண்டு (சிறிதாக வெட்டி வைக்கவும்)
10. மஞ்சள்தூள் – 1 ஸ்பூன்
11. தேங்காய் துறுவல் – 2 மேசைகரண்டி
12. இந்துப்பு – தேவையான அளவு

செய்முறை:

வாணலியில் எண்ணெய் விட்டு சீரகம், பச்சைமிளகாய், வெங்காயம், பூண்டு, இஞ்சி, கறிவேப்பிலை, மல்லித்தழை இவைகளை ஒன்றன்பின் ஒன்றாக போட்டு வதக்கி பின் இரத்தத்தை கரைத்து ஊற்றி மஞ்சள்தூள், தே.அளவு உப்பு (இரத்தத்தில் ஏற்கனவே உப்பு இருக்கும் பார்த்து போடவும்) சேர்த்து கலக்கிவிட்டு மூடி போட்டு 10 நிமிடம் வேகவிடவும். தண்ணீர் வற்றி ட்ரை ஆனவுடன் கடைசியாக தேங்காய் துறுவல் தூவி 2 நிமிடம் ஒட்டி விட்டு பின் இறக்கிவைக்கவும்.

இப்போ கோவைப்பழம் மாதிரி தக தகன்னு மின்ன “கோவை குருதிப் பொரியல்” அள்ளிச் சாப்பிட தயார் 🙂

பி.குறிப்பு

1. இரத்தத்தை ஒரு பாத்திரத்தில் வைத்து இட்லிச்சட்டியில் ஆவியில் வேகவைத்து பின் கத்தியால் சிறிய சிறிய துண்டுகளாக வெட்டியும் சமைக்கலாம்.

2. தேங்காய் துறுவல் போடாமலும் சமைக்கலாம்

3. அதே போல் இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை, மல்லித்தழை இவை இல்லாமலும் சமைக்கலாம். பெரிய வெங்காயத்துக்கு பதிலாக சின்ன வெங்காயம் போட்டும் சமைக்கலாம்.

இப்படி எப்படி சமைச்சாலும் இரத்ததின் சுவை அலாதிதான்.

வாழ்க கொழுப்புடன்! வாழ்க வளமுடன்!
சமையல் குறிப்பு :

Follow us on Social Media