க்ரீமி ப்ரோகொலி சூப் – மன்சூர் ஹாலாஜ்

ப்ரோகொலி 100 கி
பெ.வெங்காயம் 1
பூண்டு 2
பட்டை
பால் 1/4 டம்ளர்
மிளகுதூள்
மல்லிதலை
வெண்ணெய் 1 தே.க

குக்கர்ல வெண்ணெய் போட்டு பட்டை,வெங்காயம்,பூண்டு, ப்ரோகொலி அடுத்தடுத்து போட்டு சிறிது வணக்கி உப்பு சேர்த்து ஒரு டம்ளர் நீர் சேர்த்து 2 விசில் விடனும்.

கொஞ்சம் ப்ரோகொலி எடுத்து வச்சுகிட்டு பட்டயை எடுத்திட்டு மிக்ஸில நல்லா அரைச்சரனும் .

அத பான்ல ஊத்தி 1/4 டம்ளர் பால் விட்டு (பால் தவிர்க்கனும்னா அடுப்ப ஆஃப் பண்ணிட்டு தே. பால் சேர்த்துக்கலாம்) சூடானதும் மிளகு தூள், மல்லி தலை போட்றனும்.

மேல சீஸாே , க்ரீமோ போட்டுக்கலாம். சுட சுட குடிக்க நல்ல டேஸ்ட் , இதே போல காளிஃப்ளவர்லயும் செய்யலாம்.

சமையல் குறிப்பு:

Follow us on Social Media