க்வாகமோலே ஆம்லேட் – டாலி பாலா

தேவை.

1. ஆறு முட்டை ..நன்றாக அடித்து வைத்துக் கொள்ளவும்.

2. க்வாகமோலே ….ஒரு பழுத்த அவகாடோ, ஒரு எலுமிச்சை சாறு, ,ஒரு வெங்காயம் ஒரு தக்காளி ஒரு பச்சை மிளகாய் கொத்தமல்லி தழை பூண்டு பல் மூன்று. …இவை எல்லாவற்றையும் பொடியாக நறுக்கவும்.. உப்பு மிளகு தூள் தேவையான அளவு………….ஒரு பாத்திரத்தில் எண் 2 கீழே உள்ள எல்லாம் ஒன்று சேர்த்து நன்றாக அடித்து வைக்கவும் .

14650648_10207005308563369_4645744272834053096_n

3.. சீஸ் , வெண்ணெய்

டபுள் க்ரில் பேனில் வெண்ணெய் முதலில் போட்டு உருகியவுடன் அடித்து வைத்த முட்டையை அதில் ஊற்றவும் ….ஸ்டவ் சிம்ல தான் இருக்க வேண்டும்…கீழ் பகுதி வெந்த உடன் மேல் பகுதியில் க்வாகமோலே கலவையை நன்றாக பரத்த வேண்டும். மேலே சீஸ் துருவி போட்டு அந்த பேனை மூடி ஒரு ஐந்து நிமிடம் வைத்து ஆம்லெட்டை மடித்து தட்டில் மாற்றி சாப்பிடவும்… நான் வழக்கமாகவே ஒரே பக்கம்தான் ஆம்லெட் வேக வைப்பேன்.. இரண்டு பக்கம் தோசை மாதிரி வேக வேண்டும் என்றால் திருப்பி போட்டு பின் அதில் ஃபில்லிங் செய்யவும்…

சாதாரண தோசை கல்லிலும் செய்யலாம்..ஒரு தட்டு அல்லது மூடி ஏதாவது வைத்து கல்லை மூட வேண்டும் .

இது இரண்டு பேருக்கு செய்த அளவு.

சமையல் குறிப்பு: 

https://www.facebook.com/1599232022

Follow us on Social Media