சங்கரா மீன் ப்ரை – ஜலீலாகமால்

(பேலியோ வில் அசைவ சமையலில் மீன் சூப்பரான உணவு. மீன் ப்ரை 4 துண்டு சாப்பிட்டு சிறிது சாலட் ஒரு லெமன் டீ நல்ல பில்லிங்காக இருக்கும். சாலட் அல்லது பொரியல் கூட செய்துக்கலாம்)

தேவையானவை

சங்கரா மீன் ‍ அரை கிலோ
சிவப்பு மிளகாய் தூள் ‍ 1 தேக்கரண்டி
ஷான் சிக்கன் டிக்கா மசாலா ‍ ஒரு மேசை கரண்டி (இதற்கு பதில் பேலியோ மசாலா வைத்து சமைப்பவர்கள் அதை பயன் படுத்தி கொள்ளுங்கள் இல்லை சிறிது மிள்கு தூள் கரம் ம்சாலா தூள் சேர்த்துகொள்ளவும்)
லெமன் சாறு ‍ ‍ஒரு தேக்கரண்டி
தயிர் ‍ ஒரு தேக்கரண்டி
உப்பு ‍ தேவைக்கு
பொடியாக நறுக்கிய கொத்து மல்லி தழை சிறிது
இஞ்சி பூண்டு பேஸ்ட் ‍ ஓன்னறை தேக்கரண்டி

 

14993561_1288759137849947_5517944252653280569_n14937447_1288759214516606_8742072459536610300_n

 

 

 

 

 

 

அலங்கரிக்க‌
கொத்துமல்லி தழை

மீனை மஞ்சள் தூள் போட்டு நன்கு பிரட்டி 5 நிமிடம் ஊறவைத்து நன்கு கழுவி எடுக்கவும். மீனுக்கு போட வேண்டிய மசாலாக்களை ஒரு சின்ன கிண்ணத்தில் சிறிது தண்ணீர்விட்டு கலக்கி வைக்கவும். மீனை நன்கு கழுவி தண்ணீரை வடித்து. கலக்கிய மசாலாவை மீனுடன் ஒரு வாயகன்ற பாத்திரத்தில் போட்டு நன்கு கலக்கி மீனை போட்டு அதன் மேல் ஒரு முடியை போட்டு மூடி நன்கு குலுக்கவும். மசாலா மீனின் எல்லா பகுதியிலும் ஒரு சேர சேர்ந்து இருக்கும். மசாலாக்கள் போட்டு பிரட்டியதும் ஒரு மணி நேரம் ஊறவிடவும். நான் ஸ்டிக் பேனில் எண்ணையை ஊற்றி சூடு படுத்தி மீனை போட்டு நன்கு பொன்னிறமாக கருகாமல் பொரியவிடவும். சூப்பரான சுவையான சங்கரா மீன் ஃப்ரை ரெடி, . Moru Moru Sangkara miin varuval – Crispy Red Snapper Fry

சமையல் குறிப்பு:

Follow us on Social Media