சிகப்பு, மஞ்சள் & பச்சை சிக்கன் – தேன்மொழி அழகேசன்

அசைவம்# சிக்கன்
Traffic signal chicken(my son named it)
Colors like red yellow green.. chicken
1 .சிகப்பு சிக்கன்#
தேவையான பொருட்கள்
சிக்கன் 500 கிராம்
வெங்காயம் 1
இஞ்சி 1 அங்குலம்
பூண்டு 15 பல் சிறியது
தக்காளி 2 கனிந்தது
காஷ்மீரி மிளகாய் தூள் 2 மேக
உப்பு தேவையான அளவு
வெண்ணெய் 50 கிராம்
எலுமிச்சை பழம் 1/2 மூடி
செய் முறை#
சிக்கனை நன்றாக கழுவி அரைத்த இஞ்சி பூண்டு எலுமிச்சை சாறு மிளகாய் தூள் உப்பு சேர்த்து நன்றாக ஊற வைக்கவும்.(எவ்வளவு ஊறுதோ அவ்வளவு சுவை)
வடச்சட்டியில் வெண்ணெய் போட்டு உருகியதும் சோம்பு கறிவேப்பிலை அரிந்த வெங்காயம் அரைத்த தக்காளி தேவையான உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.ஊற வைத்த சிக்கனை போட்டு மிதமான சூட்டில் வேக வைக்கவும். சுவையான சிகப்பு சிக்கன் ரெடி.

2 .மஞ்சள் சிக்கன்#
தேவையான பொருட்கள்
சிக்கன் 500 கிராம்
இஞ்சி 2 அங்குலம்
பூண்டு 15 பல் சிறியது
மஞ்சள் தூள் தேவையான அளவு
எலுமிச்சை பழம் 1/2 மூடி
உப்பு தேவையான அளவு
பச்சமிளகாய் 4
செய்முறை:
நன்றாக கழுவிய சிக்கனை இஞ்சி பூண்டு மிளகாய் அரைத்த விழுது உப்பு மஞ்சள் தூள் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக ஊற வைக்கவும்.ஊற வைத்த சிக்கனை தோசைக்கல்லில் ஒன்று ஒன்றாக வைக்கவும்.தேவையான வெண்ணெய் அல்லது நெய் அல்லது தேங்காய் எண்ணெய் தடவி மிதமான சூட்டில் மூடி போட்டு வேக வைத்தால் சுவையான மஞ்சள் சிக்கன் ரெடி.

3 .பச்சை சிக்கன்#
தேவையான பொருட்கள்
சிக்கன் 500 கிராம்
இஞ்சி 2 அங்குல அளவு
பூண்டு 15 பல்
சின்ன வெங்காயம் 15
சீரகம் மிளகு 1 மேக
கொத்தமல்லி 1 கைப்பிடி அளவு
புதினா 1 கைப்பிடி அளவு
கறிவேப்பிலை 1 கைப்பிடி அளவு
பச்சமிளகாய் 6
எலுமிச்சை பழம் 1/2 மூடி
மஞ்சள் தூள் 1 தேக
உப்பு தேவையான அளவு
செய்முறை:
வடச்சட்டியில் வெண்ணெய் போட்டு உருகியதும் சோம்பு கறிவேப்பிலை தாளித்து அரைத்த வெங்காயம் இஞ்சி பூண்டு பச்சமிளகாய் கொத்தமல்லி புதினா கறிவேப்பிலை அனைத்தும் மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.அரைத்த விழுது போட்டு நன்றாக வதக்கியதும் சிக்கன் தேவையான அளவு உப்பு சேர்த்து மிதமான சூட்டில் வேக வைக்கவும்.2கை நீர் சேர்த்து வேக வைக்கவும்.
ஒரே நாளில் மூன்றையும் செய்யவில்லை ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்று செய்தேன்.ஆனால் பதிவு ஒன்று..
ஒவ்வொன்றும் செய்ய 30 நிமிடம்
குழந்தைகளுக்கு ஏற்ற கலரான உணவு . விரும்பி சாப்பிடுவர்

சமையல் குறிப்பு :

Follow us on Social Media