சிக்கன் கட்லெட் – ஹெமலதா கண்ணதாசன்

சமையல் குறிப்பு: ஹெமலதா கண்ணதாசன்
தேவையானபொருள்கள்
சிக்கன் – 500கி
வெங்காயம் -2 – சிறிய துண்டுகளாக நறுக்கியது
பச்சைமிளகாய் -4 (காரத்திற்கு ஏற்ப )
பாதாம் பவுடர் -3 டீ-ஸ்பூன்
தேங்காய் பவுடர் -2 டீ-ஸ்பூன்
முட்டை -1
உப்பு – தேவைக்கேற்ப
மஞ்சள்தூள் -1/2
இன்ஜி பூண்டு paste – தேவைக்கேற்ப

செய்முறை :
தேவையான பொருள்கள் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து கட்டியாக பிசைந்து வைக்கவும் ,தண்ணீர் ஊற்ற அவசியம் இல்லை .பிசைந்த இந்த கலவையை 1 மணி நேரம் பிரிட்ஜ்ல் வைக்கவும் . வெளியிலும் வைத்து கொள்ளலாம் .
ஒரு மணி நேரம் கழித்து இதை சிறு சிறு உருண்டையாக உருட்டி வைத்துக்கொள்ளவும் . அதேநேரம் வானொலில் 3–டீ-ஸ்பூன் நெய் ஊற்றி காயவைக்கவும் .பின்னர் உருட்டிய சிறிய உருண்டைகளை எடுத்து கையில் வைத்து தட்டையாக தட்டி வானொலில் போடவும் .பதம் பார்த்து பிரட்டி போட்டு எடுக்கவும் .இப்பொழுது சுவையான பேலியோ சிக்கன் கட்லெட் ரெடி !!

Follow us on Social Media