சிக்கன் கபாப் – தேன்மொழி அழகேசன்

தேவையான பொருட்கள்#
சிக்கன் 500 கிராம்
( எலும்பில்லாது தோலுடன்)
வெங்காயம் 1
பச்சமிளகாய் 2
இஞ்சி விழுது 1 மேக
பூண்டு விழுது 2 மேக
கறிவேப்பிலை ஒரு கைப்பிடி அளவு
கறிமசாலா 1 மேக
மஞ்சள் தூள் 1 தேக
மிளகாய்தூள் 1 மேக
சோம்பு 1 மேக
கொத்தமல்லி புதினா சிறிதளவு
உப்பு தேவையான அளவு
செய்முறை#
சிக்கனை நன்றாக நீர் போக உலர வைக்கவும்.
சோம்பு தவிர மேலே கொடுத்துள்ள வற்றை மிக்சியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த கலவையுடன் சோம்பு கலந்து பிரிட்ஞ்ல 1 மணி நேரம் வைக்கவும்.
தோசைக்கல்லில் தேங்காய் எண்ணெய் தடவி நமக்கு பிடித்த வடிவத்தில் போடவும்.
இரு விதமாக போட்டுள்ளேன்.உருளை வடிவமாகவும் வட்ட வடிவமாகவும் போட்டுள்ளேன்.உருண்டை வடிவமாக வேண்டும் என்றால் பணியாரக்கல்லில் போடவும்.
மிதமான சூட்டில் மூடி போட்டு வேக வைக்கவும்.
மேலே லேசா தேங்காய் எண்ணெய் தடவி கொள்ளவும்.
அடிக்கடி திருப்பி விடவும்.
செய்ய தேவையான நேரம் 30_40 நிமிடம்
இரண்டு பேருக்கு பரிமாரலாம்.

சமையல் குறிப்பு :

Follow us on Social Media