சிக்கன் காளான் வறுவல் – தேன்மொழி அழகேசன்

தேவையான பொருட்கள்#
சிக்கன் 250 கிராம்
காளான் 10 (மொட்டு காளான் முழுவதுமாக அரிய வேண்டாங்க)
இஞ்சி பூண்டு விழுது 2 மேக
காஷ்மீி்ரி மிளகாய் தூள் 1 மேக
கறிமசாலா 1 தேக
எலுமிச்சை பழம் 1/2 மூடி
சின்ன வெங்காயம் 5
உப்பு தேவையான அளவு
தாளிக்க கடுகு வெண்ணெய்
செய் முறை#
சிக்கனை நன்றாக கழுவிய பின்வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது மிளகாய்தூள் கறிமசாலா எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
வடச்சட்டியில் வெண்ணெய் போட்டு உருகியதும் கடுகு வெடித்ததும் ஊற வைத்த சிக்கனை போட்டு வணக்கவும்.
மிதமான சூட்டில் வேக வைக்கவும்.சிக்கன் வேக சிறிதளவு நீர் விட்டால் போதும்.பின் காளானை போட்டு தேவையான உப்பு சேருங்க.மூடி போட்டு மிதமான சூட்டில் சுருள வணக்கினால் சுவையான சிக்கன் காளான் வறுவல் ரெடி
செய்ய தேவையான நேரம் 30 நிமிடம்
ஒருவருக்கு பரிமாரலாம்.
இதே முறையில் சைவர்கள் பன்னீர் காளான் கலந்து சமைக்கலாம்.

சமையல் குறிப்பு :

Follow us on Social Media