சிக்கன் கோலா உருண்டை – பிருந்தா ஆனந்த்

#தேவையான பொருட்கள்::

எலும்பில்லாத சிக்கன் – 1/2கி
வெங்காயம் – 1
இஞ்சி பூண்டு விழுது – 2 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 4
தேங்காய் துருவியது -1கப்
சோம்பு தூள் – 1ஸ்பூன்
மிளகு ,சீரக பொடி – 1ஸ்பூன்
மிளகாய் தூள் – 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்
கரம் மசாலா – 1ஸ்பூன்
கறிவேப்பிலை – தே. அளவு
கொத்த மல்லி இலை – தே . அளவு
தேங்காய் எண்ணெய் -தே. அளவு
உப்பு – தே . அளவு

#செய்முறை::

*சிக்கனை சிறு துண்டுகளாக வெட்டி உப்பு சேர்த்து வேக வைத்து ஆறியவுடன் மிக்சியில் நீர் சேர்க்காமல் அரைத்துக் கொள்ளவும்.
*அரைத்த சிக்கனுடன் வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கிச் சேர்க்கவும்,இஞ்சி பூண்டு விழுது ,மிளகாய் தூள்,மஞ்சள் தூள்,கரம் மசாலா,சோம்பு தூள்,மிளகு சீரக தூள் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
*தேங்காவையும்,காய்ந்த மிளகாய் சேர்த்து நீர் இல்லாமல் அரைத்து கலவையில் சேர்க்கவும்.
*கொத்த மல்லி இலை,கறிவேப்பிலை சிறியதாக நறுக்கி கலவையில் உப்பு சேர்த்து கலந்து சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
*பணியார சட்டியில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி உருண்டைகளை போட்டு வறுத்து எடுத்தால்
*சுவையான சிக்கன் கோலா உருண்டை தயார்.
(பேலியோ மயொனஸ், தக்காளி சாஸ்சுடன்
சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.)

{குறிப்பு:வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி உருண்டைகளை வறுத்தும் எடுக்கலாம்}

சமையல் குறிப்பு :

Follow us on Social Media