சிக்கன் லெக் பீஸ் மசாலா – சவடன் பாலசுந்தரம்

தேவையான பொருட்கள்
—————————————–
சிக்கன் லெக் பீஸ் (தோலுடன்)- 6

பேலியோ மசாலா – 2 பெரிய தேக்கரண்டி ( நான் வேதா’ஸ் பேலியோ மசாலா பயன்படுத்தினேன்….அருமையான மணத்தையும், ருசியையும் கொடுத்தது)

சீரகம் – சிறிதளவு

பட்டை, ஏலக்காய், பிரிஞ்சி இலை – தேவையான அளவு

வெண்ணெய் – 50 கி.

உப்பு – தேவையான அளவு..

வெங்காயம், தக்காளி சேர்க்கவில்லை – கார்போஹைட்ரெட் அளவு கருதி…

14717319_10211339858514197_9130659599384085431_n

செய்முறை
——————
தோலுடன் கூடிய சிக்கன் லெக் பீஸ்களை நன்றாக கழுவி எடுத்து, பேலியோ மசாலா 2 தேக்கரண்டி சிறிது நீருடன் கலந்து , சிக்கனை marinate செய்து, 20 நிமிடங்கள் அப்படியே வைக்கவும்….குளிர் சாதனப் பெட்டியிலும் வைக்கலாம்.

பிறகு வாணலியை அடுப்பில் வைத்து, காய்ந்தவுடன் 50 கி வெண்ணெய் சேர்த்து, சோம்பு, பட்டை, ஏலக்காய், பிரிஞ்சி இலை சேர்த்து சிறிது வதக்கவும்.

பின்னர் marinate செய்த சிக்கன் லெக் பீஸ்களை போட்டு தேவையான அளவு நீர் சேர்க்கவும்..(நான் 300 மி.லி. நீர் சேர்த்தேன்)…. வாணலியை மூடி போட்டு மூடவும்.

14657397_10211339866434395_5608552439038801815_n

ஆரம்பத்தில் 10 நிமிடத்திற்கு அடுப்பு ஜ்வாலையை சிறிது அதிகம் வைக்கவும். பின்னர் SIM மில் வைக்கவும். பின்னர் 5 நிமிடத்திற்கு ஒரு முறை சிக்கனை பிரட்டி விடவும்….

நீர் நன்றாக கொதித்து, கடைசியில் வற்றி விடும் வரை அடுப்பை sim மிலேயே வைக்கவும். நான் சுமார் 40 நிமிடங்கள் வைத்தேன்.

அருமையான சிக்கன் லெக் பீஸ் மசாலா ரெடி….

இதில் கார்போஹைட்ரேட் மிகவும் குறைவு. எடை குறைப்பு, டயபடீஸ் காரர்களுக்கு ஏற்ற உணவு.

ஆனால் ருசிக்கு குறைவில்லை…..பேலியோ மசாலா(வேதா’ஸ்) பயன்படுத்தியதால் வேலையும் குறைவு….. பேலியோ மசாலா என்னைப் போன்ற சமையலில் அப்பரெண்டிஸ்களுக்கு வரப்பிரசாதம்.

செய்து பாருங்கள்……ருசியான உணவுகளை அனுபவியுங்கள்…..

வாழ்க கொழுப்புடன் !!

சமையல் குறிப்பு:

https://www.facebook.com/1292875225

Leave your vote

0 points
Upvote Downvote

Total votes: 0

Upvotes: 0

Upvotes percentage: 0.000000%

Downvotes: 0

Downvotes percentage: 0.000000%

Follow us on Social Media