சிக்கன் வறுவல் – தேன்மொழி அழகேசன்

தேவையான பொருட்கள்
சிக்கன் 300 கிராம்(எலும்பில்லாது) சிறிதாக அரிந்தது
வெங்காயம் 1
சீரகம் 1 மேக
மிளகு 1 மேக
வர மிளகாய் 5
இஞ்சி 2 இஞ்ச்
பூண்டு 10 சிறியது
கறிவேப்பிலை சிறிதளவு
தாளிக்க கடுகு சோம்பு நெய்
சீரகம் மிளகு பூண்டு இஞ்சி 4 மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
செய் முறை#
வடச்சட்டியில் நெய் ஊற்றி கடுகு சோம்பு வெடித்ததும் கறிவேப்பிலை வர மிளகாய் போடுங்க.சிறிதாக அரிந்த (எலும்பில்லாது) சிக்கனை போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளுங்க அரைத்த கலவையை வடச்சட்டியில் ஊற்றவும்.மிக்ஸி கழுவி ஊற்றிய நீரே போதும்.மிதமான சூட்டில் வேக வைக்கவும்.
2 . சிக்கன் ரசம்#
தேவையான பொருட்கள்
சிக்கன் 250கிராம்
சீரகத்தூள் 1 மேக
மிளகுத்தூள் 1 மேக
இஞ்சி பூண்டு விழுது 2 மேக
மிளகாய்தூள் 1 தேக
உப்பு தேவையான அளவு
கறிவேப்பிலை சிறிதளவு
காரம் உங்க தேவைக்கு ஏற்ப சேர்த்து கொள்ளவும்
செய் முறை#
மேலே கொடுத்துள்ள அனைத்தையும் குக்கரில் போட்டு 3 விசில் வைத்து எடுக்கவும்.சுவையான ரசம் ரெடி.குளிருக்கு ஏற்ற ரசம்…

சமையல் குறிப்பு :

https://www.facebook.com/100003711296557

Follow us on Social Media