சிப்பி (மட்டி) & கத்தரிக்காய் தொக்கு – Rtn கண்ணன் அழகிரிசாமி

#மட்டி இது கடலில் கிடைக்கும் உணவு. இதன் ருசியே தனி. இது சிப்பிக்குள் இருக்கும். சிப்பிகளை ஒரு அகன்றபாத்திரத்தில் தண்ணீர்விட்டு வேகவைக்கவும். அது வெந்ததும் சிப்பி சற்று வாய்திருந்திருக்கும். சிப்பியை திறந்தால் நன்றாக வெந்த மட்டி கிடைக்கும்.

தேவையானவை :

மட்டி ( சிப்பி ) : கால் கிலோ
கத்தரிக்காய் : 2
சிறிய வெங்காயம் : 1 கப்
தேங்காய்பால் : 1 கப்
இஞ்சிபூண்டு விழுது : 1 தேக்கரண்டி
மஞ்சள்தூள் : அரை தேக்கரண்டி
மிளகாய்தூள் : 2 தேக்கரண்டி
சோம்புதூள் : 2 தேக்கரண்டி
மல்லித்தூள் : 1 தேக்கரண்டி
பச்சைமிளாய் : 3
கருவேப்பில்லை தாளிக்க
உப்பு : தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் : 2 தேக்கரண்டி

செய்முறை :

ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, வெங்காயம் , இஞ்சி பூண்டு விழுது , பச்சை மிளகாய் & நறுக்கிய கத்தரிக்காய் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக வதக்கவும் .

பின் வெந்த மட்டி சேர்த்து , மஞ்சள் தூள் , மிளகாய் தூள் , மல்லித்தூள் , சோம்புத்தூள் , உப்பு சேர்த்து நன்றாக வேக விடவும் .

கத்தரிக்காய் நன்றாக வெந்தவுடன் தேங்காய் பால் சேர்த்து இறக்கவும் .

அத்துடன் கறிவேப்பிலை தாளித்து பரிமாறவும் .

சிப்பி (மட்டி) & கத்தரிக்காய் தொக்கு தயார் !

சமையல் குறிப்பு :

Follow us on Social Media