சிம்பிள் காலிப்ளவர் முட்டை பொரியல் – Rtn கண்ணன் அழகிரிசாமி

தேவையானவை :

காலிப்ளவர் : 150 கிராம்
வெங்காயம் : 1
முட்டை : 2
மஞ்சள் தூள் : அரை தேக்கரண்டி
மிளகாய் தூள் : ஒரு தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது : ஒரு தேக்கரண்டி
கரம் மசாலா தூள் : அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை : சிறிதளவு
உப்பு தேவைக்கு
தேங்காய் எண்ணெய் : 2 தேக்கரண்டி
வெண்ணெய் : 1 தேக்கரண்டி

ஒரு கடாயில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கி , பின் சுடு நீரில் போட்டு எடுத்த நறுக்கிய காலிப்ளவர் போட்டு வதக்கவும், சிறுது தண்ணீர் சேர்த்து மிளகாய் தூள் , மஞ்சள் தூள் , இஞ்சி பூண்டு விழுது & உப்பு சேர்த்து வேக வைக்கவும்.

நன்கு வெந்து சுண்டி வரும் போது முட்டைகளை உடைத்து அதில் ஊற்றி கிளறவும் . முட்டை வெந்து பொரியல் பதத்திற்கு வந்தவுடன் வெண்ணெய் , கரம் மசாலா & கறிவேப்பிலை சேர்த்து பிரட்டி இறக்கவும்.

சுவையான காலிப்ளவர் முட்டை பொரியல் தயார் !

சமையல் குறிப்பு :

Follow us on Social Media