சிம்பிள் காளான் மிளகு வறுவல் – தேன்மொழி அழகேசன்

தேவையான பொருட்கள்#
காளான் 1/2 கிலோ
வெங்காயம் 1
பூண்டு 10 பல்
இஞ்சி 1 இஞ்ச்
வர மிளகாய் 2
மிளகுத்தூள் 2 மே.க.
தனியா தூள் 1 தே.க.
கறிவேப்பிலை ஒரு கைப்பிடி அளவு
தாளிக்க வெண்ணெய் கடுகு சோம்பு
உப்பு தேவையான அளவு
செய் முறை#
வடச்சட்டியில் வெண்ணெய் போட்டு வெண்ணெய் உருகியதும் கடுகு சோம்பு போடவும்.கடுகு வெடித்ததும் கறிவேப்பிலை வர மிளகாய்,சிறியதாக வெட்டிய வெங்காயம்,இஞ்சி,பூண்டு போட்டு நன்றாக வதக்கவும்.சிறியதாக வெட்டிய காளானை போட்டு தேவையான உப்பு போடுங்க.தண்ணீர் விட வேண்டாங்க காளானில் உள்ள நீரே போதும்.பின் தனியா தூள் மிளகு தூள் போடுங்க.நீர் வற்றும் வரை சுருள வதக்கினால் சுவையான காளான் மிளகு வறுவல் ரெடி..

சமையல் குறிப்பு :

Follow us on Social Media