சிம்பிள் சிக்கன் ரோஸ்ட் – Rtn கண்ணன் அழகிரிசாமி

தேவையானவை :

சிக்கன் : அரை கிலோ
இஞ்சி பூண்டு விழுது : 2 தேக்கரண்டி
எலுமிச்சை : 1
காஷ்மீர் மிளகாய்தூள் : 2 தேக்கரண்டி
தயிர் : 2 தேக்கரண்டி
தேங்காய் எண்ணெய் : 2 தேக்கரண்டி

செய்முறை:

சிக்கனை சுத்தம் செய்து பெரிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.சிக்கனுடன் தயிர் இஞ்சி பூண்டு விழுது ,மிளகாய்தூள் , எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து 1 மணி ஊறவைக்கவும்.

பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சிக்கன் கலவையை கொட்டி, நன்றாக வேக வைத்து ரோஸ்ட்டாக்கவும்.

சிம்பிள் சிக்கன் ரோஸ்ட் தயார் …

குறிப்பு : இதே முறையில் சிக்கனுக்கு பதிலாக மட்டன் கால் கிலோ உபயோகிக்கலாம். அப்போது அது சிம்பிள் மட்டன் ரோஸ்ட்.

சமையல் குறிப்பு :

Follow us on Social Media