சிம்பிள் சீஸ் ஆம்லேட் – Rtn கண்ணன் அழகிரிசாமி

தேவையானவை :

முட்டை : 2
நெய் : அரை தேக்கரண்டி
குடை மிளகாய் : நறுக்கியது 2 தேக்கரண்டி
வெங்காயம் : 1
மிளகாய் தூள் : அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் : கால் தேக்கரண்டி
கரம் மசாலா : கால் தேக்கரண்டி
இந்துப்பு : தேவைக்கு
சீஸ் : நான்கு தேக்கரண்டி (துருவியது)
கொத்தமல்லி இலை : சிறிது

செய்முறை :

ஒரு தவாவில், நெய் ஊற்றி, சூடானதும், வெங்காயம், குடை மிளகாய் வதக்கி, மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, இந்துப்பு, & கொத்தமல்லி இலை சேர்த்து பிரட்டி, நன்றாக தவாவில் பரப்பி வைக்கவும்.

பின் அதன் மேல் முட்டைகளை உடைத்து ஊற்றி, பரப்பி வேகவிடவும், ஒருபுறம் வெந்தவுடன் திருப்பி போட்டு வேக விடவும். பின் சீஸை அதன் மேல் தூவி, ஆம்லெட்டை மடித்து, மிதமான தீயில் இரண்டு நிமிடம் வைத்து, எடுக்கவும்.

சுவையான சிம்பிள் சீஸ் ஆம்லேட் தயார் !

(சீஸில் உப்பு இருப்பதால், ஆம்லெட்டில் உப்பை சரியாக சேர்க்கவும்)

சமையல் குறிப்பு :

Follow us on Social Media