சிம்பிள் வெஜ் ப்ராத் – Rtn கண்ணன் அழகிரிசாமி

தேவையானவை :

காளிஃப்ளவர் : 100 கிராம்
கேரட் : 100 கிராம்
முட்டைக்கோஸ் : 100 கிராம்
கீரை : அரை கட்டு
மஸ்ரூம் : 100 கிராம்
குடைமிளகாய் : 1
பிரிஞ்சி இலை : 2
பட்டை : 1 இன்ச்
கிராம்பு : 2
ஏலக்காய் : 2
பூண்டு : 5 பல்
இஞ்சி : 1 இன்ச்
மிளகு : 10
பசு மஞ்சள் : அரை இன்ச்
உப்பு : தேவைக்கு

தண்ணீர் : 2 லிட்டர்
வெண்ணெய் தேவைக்கு

செய்முறை:

அனைத்து பொருட்களையும் நறுக்கி தண்ணிரில் சேர்த்து, நன்றாக கொதிக்க விட வேண்டும். கொதி வந்தவுடன் தீயை மிகக் குறைவாக வைத்து மூடி போட்டு ஒரு மணி நேரம் நன்றாக வேக விட வேண்டும் . 2 லிட்டர் தண்ணீர் சுண்டி ஒரு லிட்டராக வரும் போது அடுப்பை அணைத்து, இறக்கி வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.

தேவைப்படும் போது 1 : 1 (ப்ராத் : தண்ணீர் ) சேர்த்து சூடாக்கி , 30 கிராம் வெண்ணெய் சேர்த்து , சுவைக்கு மிளகுத்தூள் & உப்பு சேர்த்து பருகலாம்.

சிம்பிள் வெஜ் ப்ராத் தயார்

சமையல் குறிப்பு :

Follow us on Social Media