சீமை சுரைக்காய் ஃப்ரை – தேன்மொழி அழகேசன்

தேவையான பொருட்கள்
சீமை சுரைக்காய் 1( வட்ட வடிவமாக கட் பண்ணி கொள்ளவும்)
மிளகாய்தூள் 1 டீக
மஞ்சள் தூள் 1/2 டீக
இஞ்சி பூண்டு விழுது 1/2 டீக
சீரகம் மிளகு தூள் 1/2 டீக
உப்பு தேவையான அளவு
எலுமிச்சை சாறு 1 டீக
செய் முறை##
எலுமிச்சை சாறுடன் மிளகாய்தூள் மஞ்சள் தூள் உப்பு,சீரகம் மிளகு தூள்,இஞ்சி பூண்டு விழுது அனைத்தையும் ஒன்றாக கலந்து கொள்ளவும்,பின் காயில் அந்த விழுதை தடவி சிறிது நேரம் வைக்கவும்.(கெட்டி விழுதாக இருக்கும் ) காயில் உள்ள நீரும் சேர்ந்தால் சரியாக இருக்கும்.தோசைக்கல்லில் தேங்காய் எண்ணெய் தடவி காயை ஒன்று ஒன்றாக வைக்கவும்,சிறிது நேரம் கழித்து திருப்பி போடவும்.மிதமான சூட்டில் வைத்து செய்யவும்.சுவை காளான் சுவை போலவே உள்ளது.தொட்டுக்கொள்ள தேங்காய் எண்ணெயில் தாளித்த தயிர் சுவையாக இருக்கும்.

சமையல் குறிப்பு :

https://www.facebook.com/100003711296557

Follow us on Social Media