சீஸி எக் பன்னீர் பீசா – தேன்மொழி அழகேசன்

தேவையான பொருட்கள்#
நாட்டுக்கோழி முட்டை 4
பெரிய வெங்காயம் 1 (சிறியதாக அரிந்தது)
பச்சமிளகாய் 2 (வட்டமாக அரிந்தது)
பெருங்காயம் சிறிதளவு
கறிவேப்பிலை,கொத்தமல்லி சிறிதளவு
மிளகாய்தூள் 1/2 தேக
பன்னீர் 100 கிராம்(சின்னதாக கட் பண்ணவும்)
சீஸ் 2 துண்டு
உப்பு தேவையான அளவு
மஞ்சள் தூள் 1 தேக
செய்முறை#
தோசைக்கல்லில் தேங்காய் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை வணக்கி,ஒரு பாத்திரத்தில் மேலே கொடுத்துள்ள வற்றை ஒன்றாக கலக்கவும்.(சீஸ் தவிர). தோசைக்கல்லில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கலவையை ஊற்றவும்.ஒருபக்கம் நன்றாக வெந்ததும் மறுபக்கம் மெதுவாக திருப்பவும்(மிதமான சூட்டில் வேக வைக்கவும்). சீஸ் 2 துண்டு அல்லது துருவியது சேர்த்து கொள்ளவும்.சுவையான பீசா ரெடி.
செய்ய தேவையான நேரம் 15 நிமிடம்
1 முட்டையில் 6 கிராம் புரதம் உள்ளது
100 கிராம் பன்னீர் _265 கலோரி,20.8 கிராம்fat,1.25 carb,10.3 g protein உள்ளது . உங்க உணவை அதுக்கு ஏற்றாற் போல் அமைத்துக் கொள்ளவும்.
அவனில் இன்னும் அருமை.

சமையல் குறிப்பு :

Follow us on Social Media