சீஸ், கிரீம் சீஸ், யோகட் சீஸ், பன்னீர் செய்முறை – பிருந்தா ஆனந்த்

#பன்னீர் ::

*1 லி முழு கொழுப்பு பாலை நன்றாக காய்ச்சி பொங்கும் போது அடுப்பை சிம்மில் வைத்து 1 எழுமிச்சை சாற்றை கொஞ்சம் கொஞ்சமாக பாலை கலக்கிக் கொண்டே சேர்க்கவும் ,சிறிது நேரத்தில் பால் திரியும்,
*வடிகட்டியின் மேல் மெல்லிய துணியை விரித்து திரிந்த பாலை ஊற்றவும் ,வடிகட்டி கீழே ஒரு பாத்திரத்தை வைக்கவும்.
*நீர் வடிந்தவுடன் ஒரு மூட்டையாக கட்டி மேலே கனமான பொருள் வைத்தால் சிறிது நேரத்தில் எஞ்சிய பாலில் உள்ள நீரரும் வெளியேரும் இப்போது சுவையான பன்னீர் தயார்.

#சீஸ் ::

பன்னீர் செய்முறை வரை அப்படியே செய்து மிக்சியில் கட்டி இல்லாமல் அரைக்கவும்,சிறிது உப்பு சேர்த்து
நன்றாக நைசாக வரும் வரை தொடர்ந்து அரைத்தால் சீஸ் தயார்.

#கிரீ்ம் சீஸ்::

* சீஸ்ஸிக்கு உள்ள செய்முறை அப்படியேதான் ஆனால்
இதில் 3 கப் முழு கோழுப்பு பாலுடன் 3 கப் கிரீம் சேர்க்க வேண்டும்.
*பாலுடன் கிரீமை சேர்த்து காய்ச்சி பால் பொங்கியவுடன் எழுமிச்சை சாறு சேர்க்க வேண்டும் ,பிறகு திரிந்த பாலை வடிகட்டி
மிக்சியில் உப்பு சேர்த்து கட்டி இல்லாமல் அரைத்தால் கிரீம் சீஸ் தயார்.

#யோகட் சீஸ்:: 1

*முழு கொழுப்பு பாலில் உறை ஊற்றிய தயிர்.
* ரொம்ப புளிக்க கூடாது.
*தயிரை பன்னீர் வடிகட்டியது போல் வடிகட்டவும்,
*இதற்கு நேரம் பிடிக்கும்
அதனால் வடிகட்டும் பொது பிரிட்ஜில் வைத்து விடவும் அப்போது புளிக்காமல் இருக்கும்.
*1 நாள் கழித்து வெளியே எடுத்தால் நீர் தனியாக பிரிந்து கட்டியான யோகட் சீஸ் கிடைக்கும்.

#யோகட் சீஸ் :: 2

*தயிருடன் ,பன்னீர் சேர்த்து அரைத்து பின்பு
வடிகட்டும் முறையை பிரிட்ஜில் செய்யவும்
நீர் வடிந்தவுடன் யோகட் சீஸ் தயார்.

[குறிப்பு: *சீஸ்ஸை பிரிட்ஜில் வைத்து 10 நாட்கள் பயன்படுத்தலாம்,
*யோகட் சீஸ் சாலடுக்கு உபயோகிக்கலாம்]

சமையல் குறிப்பு :

https://www.facebook.com/100006513832331

Follow us on Social Media