சுட்ட கத்திரி டிலைட்- வித்யா சவுந்தர்யா

தேவையான பொருட்கள்:
1. பெரிய கத்தரிக்காய் – 1
2 . தக்காளி – 1
3 .குடமிளகாய் – 1
4. வீட்டில் அரைத்த சாம்பார் பொடி – 1 ஸ்பூன்.
5. பச்சை மிளகாய் – 3
6. தேங்காய் துருவல் – 5 ஸ்பூன்
7. வெண்ணெய் – 25 கிராம்

செய்முறை:
1. கத்தரிக்காயை அனலில் 5 நிமிடம் சுழற்றி சுடவும். ஆற விடவும். தோல் உரித்து பெரிய துண்டுகளாக நறுக்கவும்.
2. குடமிளகாய், தக்காளியை பெரிய துண்டுகளாக்கவும்.
3. வாணலியில் வெண்ணெய் விட்டு உருகியதும் பச்சை மிளகாயை வதக்கவும். பின்னர் உப்பு, குடமிளகாய் சேர்த்து சிறிது வதக்கவும். தக்காளி, சாம்பார் பொடி சேர்த்து 2 நிமிடம் வதக்கி, கத்திரி துண்டுகளை சேர்த்து வதக்கவும்.
4. சிறு தீயில் வைத்து 5 நிமிடம் கழித்து இறக்கி தேங்காய் துருவலுடன் சுவைக்கவும்.

சுட்ட கத்திரியில் இருந்து வடியும் நீருடன் சுவையுங்கள்.

சமையல் குறிப்பு :

Follow us on Social Media