சுண்டைக்காய் மசாலா,பிரோக்கோலி மசியல் – தேன்மொழி அழகேசன்

சுண்டைக்காய் மசாலா,பிரோக்கோலி மசியல்

சுண்டைக்காய் மசாலா
தேவையான பொருட்கள்,
பச்ச சுண்டைக்காய் 1 டம்ளர்
பேலியோ மசாலா 11/2 டேக
சின்ன வெங்காயம் 10
பூண்டு 10 பல் சிறியது
தக்காளி 2
நெல்லிக்காய் 2
தாளிக்க கடுகு சோம்பு கருவேப்பிலை நல்லெண்ணெய்
உப்பு தேவையான அளவு
செய் முறை#
ஒரு வடச்சட்டியில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு சோம்பு கருவேப்பிலை , தக்காளி,சின்ன வெங்காயம, உப்பு தேவையான அளவு் போட்டு தாளித்து பின் சுண்டைக்காயை சேர்த்து வதக்கவும்.( சுண்டைக்காயை நான் அப்படியே சேர்த்து கொண்டேன்,தேவையென்றால் தட்டி அல்லது உடைத்துக்கொள்ளவும்) . நெல்லிக்காயை சிறு துண்டுகளாக போடவும்.
எண்ணெய் பிரிந்துவரும்வரை வதக்கவும்.
பிரோக்கோலி மசியல்#
தேவையான பொருட்கள்
பிரோக்கோலி 1
வெங்காயம் 1
இஞ்சி பூண்டு விழுது 1/4 டீக
மிளகாய் வத்தல் 2
உப்பு தேவையான அளவு
மஞ்சள் தூள் 1/2 டீக
செய் முறை#
ஒரு வடச்சட்டியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகு ,கருவேப்பிலை , மிளகாய் வத்தல், இஞ்சி பூண்டு விழுது , மஞ்சள் தூள் போட்டு தாளிக்கவும்.பிரோக்கோலியை சுடு தண்ணீரீல் நன்றாக கழுவி விட்டு மிக்சியில் போட்டு உதிரியாக அரைத்துக் கொள்ளவும்.உதிரியாக உள்ள பிரோக்கோலி,உப்பு போட்டு நன்றாக வதக்கவும்.சிறிது நேரம் வதக்கினால் போதும்.மசியல் ரெடி.

சமையல் குறிப்பு :

https://www.facebook.com/100003711296557

Follow us on Social Media